சபரிமலை ஐயப்பன் கோவிலில் கண்ணீர் விட்டு அழுதபடி ஏன் சுவாமியை தரிசித்தார் கேரளா ஐஜி.? டி-ஷர்ட், வேட்டி அணிந்து கண்களில் தாரை தாரையாக கண்ணீருடன் ஐயப்பன் முன்பு நின்று மனமுருகி வேண்டியப்டி நின்ற ஐஜி ஸ்ரீஜித் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐஜி ஸ்ரீஜித்… சபரிமலை விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர். சபரிமலை கோயில் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகு ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக எழுந்து வந்தது. குறிப்பாக தென் மாநிலங்களில் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.
ஆனால் கடந்த 17ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்ட பின்பு இது மேலும் தீவிரமடைந்தது. ரெஹனா, கவிதா என 2 பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டபோது கலவரம் மேலும் சூடானது. அப்போது கண்டன முழக்கம் விண்ணை பிளந்தது.
பெண்களின் வருகைக்கு எதிரான கருத்துகள் எங்கும் நிறைந்தன. பக்தர்களுடன் எங்களுக்கு மோதல் தேவையில்லை, தாங்கள் சட்டத்தினை பின்பற்றுகிறோம் என்று சொன்னார் ஐஜி ஸ்ரீஜித். அப்போது அந்தப் பெண்களுக்கு காவலர்கள் பயன்படுத்தும் கவசங்களை அணிவித்து போலீஸ் பாதுகாப்புடன் தனது தலைமையில் பத்திரமாக அழைத்து வந்தார் ஐஜி ஸ்ரீஜித்.
இப்படி 2 பெண்களுக்கும் ஸ்ரீஜித் கவசத்தை மாட்டி கூட்டிச் செல்லலாமா என எதிர்க்கட்சிகள் கடைந்தெடுத்தன. இப்படி ஒரே நாளில் புகழ்பெற்றார் ஸ்ரீஜித். இந்நிலையில் கோயில் நடை திறக்கப்பட்டபோது, பக்தர்கள் கூட்டம் முண்டியத்து சென்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தது ஐஜி ஸ்ரீஜித்தேதான்.
விரைப்பான காக்கிச் சட்டை இப்போது இல்லை. டி-ஷர்ட் மற்றும் வேட்டி அணிந்திருந்தார். பதட்டமான செயலோ, அன்றைக்கு கலவரத்தில் காணப்பட்ட டென்ஷன் முகமோ எதுவும் இல்லை. பக்திப் பழமாக பக்தர்களுடன் பக்தராக நின்று கொண்டிருந்தார்.
கருவறை கதவு திறக்கப்பட்டது. அப்போது கையெடுத்து ஐயப்பனை வணங்கிய ஸ்ரீஜித் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. மனமுருகி வேண்டினார். இந்தக் காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…
கேரள ஐஜி ஶ்ரீஜித் சிறந்த மூகாம்பிகை பக்தர். மலையாள சேனலான ஜெயம் டிவியில் பேசும் போது இரண்டு பெண்களை போலீஸ் உடையில் சபரிமலை கோவிலுக்கு அழைத்துச் செல்ல தன்னை முதல்வர் பிணராயி விஜயன் கட்டாயப்படுத்தியதாகப் பேட்டியளித்தார்..! வெளிநாட்டிலிருந்து இந்த உத்தரவை பிணரயி விஜயன் தனக்கு நேரடியாக போனில் உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார்..!
இந்த உத்தரவுக்கு பிறகு MV ஜெயராமனும், DGP லோக்நாத் பெஹாராவும் ஐஜி ஶ்ரீஜித்-ஐ அழைத்து இந்த கடவுள் மறுப்பாள நாத்திகப் பெண்களை கோவிலுக்குள் எப்படியாவது அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே கம்யூனிஸ ஜோடிகள் நடத்தி வந்த ஆன்லைன் விபசாரத்தை முறியடித்து அவர்களை ஜெயிலுக்கு அனுப்பியவர். அதற்காகவே பிணரயி விஜயனின் கம்யூனிஸ அரசு இந்த நேர்மையான ஆபீஸரைப் பழிவாங்க காத்திருந்தது. சரியாக அவரை இந்த நேரத்தைப் பயன்படுத்தி பழிவாங்கியுள்ளது.
கம்யூனிஸ்ட் அரசு எப்படியாவது ஒரே ஒரு பெண்ணாவது சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து அதன் புனிதத்தைக் கெடுக்க வேண்டும்; சபரிமலை என்பது நம்பிக்கை கொள்ளத்தக்க அளவில் ஒரு தலமல்ல என்பதையும், அங்கே கடவுள் தன்மை எதுவும் இல்லை என்று உலகுக்கு அடிக்கோடிட்டுக் காட்டவும் வேண்டும் என்பதில் பெரும் முனைப்புடனும் தீர்மானமானத்துடனும் இருந்தது பளிச்செனத் தெரிந்தது. அதற்கு ஏற்ப, நடை அடைக்கப் படும் முன்னதாக, எப்படியாவது ஒரே ஒரு பெண்ணையாவது சந்நிதானத்தின் முன் நிறுத்தியே காட்டவேண்டும் என்று பிணரயி விஜயன் அரசு வெறியுடன் இருந்ததாக ஶ்ரீஜித்தும் மற்ற ஹிந்து போலீஸ் அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
அதற்காகவே ஏற்கெனவே இருந்த பெந்தகோஸ்ட் ஆப்ரஹாமை அங்கிருந்து அகற்றி ஒரு ஹிந்து உணர்வுள்ள ஐஜியை அங்கு அந்தப் பொறுப்பை ஏற்கும்படி செய்துள்ளனர்.
தற்போது.. இதே கம்யூனிஸ அரசு அந்த ஹிந்து அதிகாரியைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது. மாநில உளவுத்துறை இத்தனை செயலுக்கும் ஹிந்து அதிகாரியே காரணம் என்று பழியை ஐஜி ஶ்ரீஜித் மேல் போட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வொரு தருணத்தையும் எப்படி ஹிந்து மத அழிப்புக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.