சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் கால அளவை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கக் கோரியும், ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது என்றும், காற்று மாசு, சுவாசக் கோளாறு ஏற்படுகிறது என்றும் கூறி, பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி பட்டாசுகளுக்கே ஒட்டுமொத்தமாக தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீபாவளி நாளன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், புத்தாண்டு நாளில் நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டது. ஆனால் இப்படி வெறும் 2 மணி நேரம் மட்டுமே கால அளவு கொடுத்து, இந்துக்களின் பண்டிகையான தீபாவளியின் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்ததை நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் குறிப்பாக பட்டாசுகள் வெடிப்பதில் ஆர்வம் கொண்ட சிறுவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும், உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மாற்றக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
This is another case of Anti Hindu verdict. DO WE NEED THIS SYSTEM WHICH HAS BEEN WORKING AGAINST THE INTEREST OF THE MAJORITY COMMUNITY. It looks the election in 2019 has a lot of influence in the present system. Are the Hindus spiritless ?
WHY NOT SOME HONEST SELFLESS PERSON TAKE AN ABORTIVE ACTION TO ATLEAST TAME THE POLITICAL RASCALISM AND CHANGE THE OUTDATED CONSTITUTION WHICH FAVOURS ONLY THE PARTIES AND LEADERS.