புது தில்லி: தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டாசு வெடிக்க தடைகேட்டு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்தமாக தடைவிதிக்க மறுத்ததுடன், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு விலக்கு கேட்டு தமிழக அரசு தரப்பில் இருந்து மனு அளிக்கப் பட்டது.
இருப்பினும், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், ஆனால் அந்த நேரத்தை மாநில அரசே தேர்வு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இதை அடுத்து அந்த 2 மணி நேர கால அளவை ஒரு மணி நேரம் காலையிலும் ஒரு மணி நேரம் இரவிலும் என்று பிரித்துக் கொடுத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.