புது தில்லி: தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டாசு வெடிக்க தடைகேட்டு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்தமாக தடைவிதிக்க மறுத்ததுடன், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு விலக்கு கேட்டு தமிழக அரசு தரப்பில் இருந்து மனு அளிக்கப் பட்டது.
இருப்பினும், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், ஆனால் அந்த நேரத்தை மாநில அரசே தேர்வு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இதை அடுத்து அந்த 2 மணி நேர கால அளவை ஒரு மணி நேரம் காலையிலும் ஒரு மணி நேரம் இரவிலும் என்று பிரித்துக் கொடுத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |
விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |
தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |
சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |
* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |
விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |
இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |