தீபாவளியை சபரிமலையில் வைத்துக் கொண்டாடுவோம் என்றும், கம்யூனிஸ்ட் அரசின் சதியை முறியடிப்போம் என்றும் கூறியுள்ளது ஐயப்ப சேவா சங்கம்.
இது குறித்து சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழ்நாடு கிளையின் சார்பில் அதன் மாநிலப் பொருளாளர் ஜி.என்.ஜெயராம் பெயரில் சுற்றறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதில் குறிப்பிடப் பட்டிருப்பது….
சுவாமி சரணம்: சபரிமலையின் மாண்பைக் காக்க உறுதி எடுத்துக்கொண்டுள்ள நாம் உடனே செயல்பட வேண்டியுள்ளது அவசியம்.
உச்ச நீதிமன்றம் அனைத்து மறுபரிசீலனை மனுவையும் வருகின்ற 13 ஆம் தேதி பரிசீலிப்பதாக இன்று அறிவித்துள்ளது. ஆனால் வரும் 5 ந் தேதி மாலை பொன்னம்பலம் நடை திறந்து 6 ந் தேதி இரவு தான் சாற்றப்படும். இந்த 30 மணி நேரத்தில் எப்படியாவது இளம் பெண்களை சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்ல கேரளாவிலுள்ள கம்யூனிஸ்டு அரசாங்கம் எல்லா வகையிலும் திட்டமிடுகின்றது.
இதைத் தடுக்க வேண்டுமெனில் உண்மையான ஐயப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு காவல் புரிய வேண்டும். ஆகவே இவ்வருட தீபாவளியை ஐயப்பன் சந்நிதியில் கொண்டாடுவோம். அரக்கர்களை ஒழிப்போம்.
5 ஆம் தேதி காலை செங்கண்ணுர் அல்லது எருமேலி வந்தடைய வேண்டும். தீபாவளி நாளில் நடை சாற்றியதும் கீழே இறங்கலாம்.
உங்கள் பகுதியிலிருந்து எத்தனை ஐயப்பன்மார்கள் (பாதுகாவலர்கள்) கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை எமக்குத் தெரியப்படுத்தவும்.
அன்புடன், ஜி.என்.ஜெயராம் அ.பே : 7339569999 / 9585633399 என்று ஒரு தகவல் வைரலானது!