மிசோரம் தலைமை தேர்தல் ஆணையரை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடந்தது. இதையடுத்து டெல்லி வருமாறு தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.பி. ஷாசாங்கிற்கு தலைமை தேர்தல் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மிசோரம் மாநில சட்டசபைக்கு நவ. 28-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் மிசோரம் மாநில இளைஞர் அமைப்பினர் நேற்று தேர்தல் ஆணையம் முன்பாக போராட்டம் நடத்தினர். இதில் தேர்தல் ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும், ப்ரூ சமூகத்தினர் மிசோரமில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.