சபரிமலை போராட்டங்கள் நியாயமானவை அல்ல… கேரள உயர் நீதிமன்றம் கருத்து!

சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நியாயமானவை அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது, கேரள உயர் நீதிமன்றம்!

சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நியாயமானவை அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது, கேரள உயர் நீதிமன்றம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, கோயிலில் காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறையான 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கும் நடைமுறையை ரத்து செய்து, அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதற்கு எதிராக சபரிமலை மட்டுமின்றி கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான திருப்பூணித்துராவைச் சேர்ந்த ஒருவர் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நியாயமானதல்ல என்று கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.