மும்பை:
மும்பையை அடுத்த தானேயில் குடும்பத்தினர் 14 பேரை கழுத்தறுத்து கொலை செய்து அஸ்னேன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அங்கு நேற்று ஊடகத்தினர் குவிந்தனர்.
அந்தப் பிணக்குவியலை படம் பிடிக்க வந்த தனியார் டி.வி. கேமராமேன் ரதன் பவுமிக் (வயது 30), அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். உடனே அவர் தானே மாநகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மாரடைப்பில் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் கூறினர்.
பிணக்குவியலை படம் பிடிக்க சென்ற இடத்தில் அதிர்ச்சியில் ரதன் பவுமிக் மாரடைப்பால் உயிரிழந்தது அவரது குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.