spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு அரசு உத்தரவு!

அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு அரசு உத்தரவு!

- Advertisement -

பாகிஸ்தான் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப்  நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானில் தவறுதலாக லேண்ட் ஆனதில் பாகிஸ்தானியர்களிடம் பிடிபட்டார்! அவர் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்!

இந்நிலையில் அபிநந்தனை பாகிஸ்தானியர்கள் அடிப்பதும் முகத்தில் காயம் ஏற்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தி, அவரை அழைத்துச் சென்று விசாரிப்பது போல் உள்ள வீடியோக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் வெளியிடப்பட்டன! இந்தியர்கள் உணர்ச்சியைத் தூண்டிவிட இந்த வீடியோக்களை வெளியிட்டது பாகிஸ்தான்.

இந்த வீடியோக்களை பலரும் தங்கள் கூகுள், பேஸ்புக், யுடியூப்பில் பதிவு செய்தார்கள்!யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் இவற்றை பகிர்ந்தார்கள். இந்நிலையில் இந்தப் படங்களையும் வீடியோக்களையும் பகிர வேண்டாம் என்று இந்திய தொழில்நுட்ப துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது

மேலும் யுடியூப் நிறுவனத்துக்கு ஐ.டி., அமைச்சகம் கொடுத்துள்ள அறிவிப்பில் யூடியூப்பில் இருந்து 11 வீடியோக்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது

இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டபடி யுடியூப்பில் உள்ள அபிநந்தன் வர்த்தமான் தொடர்பிலான வீடியோக்கள் லிங்குகளை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபடி, யுடியூப் நிறுவனமும் அந்த வீடியோக்களை இனங்கண்டு நீக்கி வருகிறது

கூகுளை அரசுத் தரப்பில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்த போது கூகுள் நிறுவனம் தங்களால் இயன்ற அளவில் உடனடியாக இந்த வீடியோக்களை நீக்கி விடுவதாக கூறி இருந்தது!

முன்னதாக நெட்டிசன்கள் அபிநந்தன் குறித்து ஹாஷ்டேகுகளை அதிகம் பதிவிட்டு இந்த வீடியோக்களை பகிர்ந்திருந்தனர்! அதே நேரம் இந்திய அரசின் தரப்பில் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்த போது சர்வதேச நெறிமுறைகளை மீறி இதுபோன்ற வீடியோக்களை வெளியில் உலவ விட்டது தவறு என்று கண்டித்திருந்தது!

News Summary: The IT Ministry has asked YouTube to remove 11 video links pertaining to Wing Commander Abhinandan Varthaman, who was captured by Pakistan during an air combat on February 27, according to sources. The ministry had asked YouTube to remove the clips following directive from the Home Ministry, a government source said, adding that the said links have now been removed.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe