― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஎன் மீதான வெறுப்பை நாட்டின் மீது காட்டுகின்றனர்! பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடி தரப்படும்! மோடி சூளுரை!

என் மீதான வெறுப்பை நாட்டின் மீது காட்டுகின்றனர்! பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடி தரப்படும்! மோடி சூளுரை!

- Advertisement -

modi in kanyakumari

விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக மதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான பணி முடிக்கப்பட்ட சாலை மற்றும் பணகுடி முதல் கன்னியாகுமரி வரையிலான பணி முடிக்கப்பட்ட சாலைகளை திறந்து வைத்தார் மோடி. தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களைத் திறந்து வைத்தார்.

அடுத்து, மதுரை முதல் செட்டிக்குளம் வரையும், செட்டிக்குளம் முதல் நத்தம் வரை யிலான சாலை மற்றும் கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா மற்றும் போக்குவரத்து மியூசியம் உள்ளிட்ட திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில், “மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்கவும், தமிழகத்தின் பிற்பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்கவுமான நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகை தந்துள்ளார். நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

ஏழைகள் விவசாயிகளுக்கு எந்த ஒரு காலகட்டத்திலும் நடக்காத திட்டங்களை வாரி வழங்கியுள்ள பிரதமருக்கு வணக்கங்கள். தமிழகம், தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை தந்திருக்கிறார்! அதற்காகப் பிரதமருக்கு நன்றி.

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இதுவரை இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் திட்டங்களை எவரும் தந்ததில்லை. குமரி மாவட்டத்தில் 40,000 கோடி ரூபாய்க்குத் திட்டங்களைத் தந்த பிரதமருக்கு நாம் உயிர் உள்ளவரை நன்றியுடன் இருப்போம்” என்று பேசினார்.

முன்னதாக, பிரதமருக்கு முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்! தொடர்ந்து, சாலை மற்றும் ரயில்வே திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், பயங்கரவாதிகளை நரசிம்மரைப் போல் மோடி அழித்துள்ளார் என்று கூறினார்!

அப்போது அவர், தமிழகத்துக்கான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமரை வரவேற்கிறோம். பிரதமர் மோடி தமிழகத்துக்கு பல துடிப்பான திட்டங்களை அள்ளி வழங்க கன்னியாகுமரி வந்துள்ளார், பாரத தாயின் திருப்பாதங்களைத் தாங்கி நிற்கிறது கன்னியாகுமரி! விரைவில்  பெறவிருக்கும் மாபெரும் வெற்றியின் தொடக்க விழா இது! அண்டை நாடுகளின் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக மோடி நரசிம்ம அவதாரம்  எடுத்தார்! கண் உறங்காமல் நாட்டைக் காக்க பிரதமர் எடுத்த முயற்சியை நாடே பாராட்டுகிறது! பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை
மணியாக அமைந்துள்ளது! எதிர்க்கட்சிகளும் பாராட்டும் அளவுக்கு தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்! தாய்நாட்டின் அமைதி,  பாதுகாப்புக்கு துளியும் பங்கம் ஏற்படாமல் பிரதமர் மோடி நடவடிக்கை வருகிறார்!

விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் வேளாண் துறையில் வரவேற்கத்தக்கது! ஆயுஷ் மான் பாரத் திட்டம் கோடிக்கணக்கானோருக்கு பயன் அளிக்கும் திட்டமாக உள்ளது என்றார் ஓபிஸ்.

தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர், தமிழகத்திற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி என்றும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறோம் என்றும் கூறினார். மேலும், முக்கடல் மட்டுமல்ல மூன்று மதங்களும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி! கல்லாதவர்களே இல்லா அளவிற்கு கற்றவர்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி!

அ.தி.மு.க. அரசு அதிகளவிலான திட்டங்களை கன்னியாகுமரியில் செயல்படுத்தி வருகிறது! தேங்காய் பட்டணத்தில் ஒருங்கிணைந்த துறைமுகம் அமைத்திட ஆய்வுப்பணிகள் நடைபெறுகின்றன. 50 சதவீத மானியத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 25 கோடி ரூபாய் செலவில் கடலரிப்பு தடுப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன, அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் கன்னியாகுமரியில் 24 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஒக்கி புயலின் போது சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக சுமார் 11 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. விளவங்கோட்டில் 15 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது, 20 கோடி ரூபாய் செலவில் 15 இடங்களில் பன்னோக்கு பாதுகாப்பு கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன! கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பாரதப் பிரதமரால் அர்ப்பணிக்கப்பட உள்ளது! வளர்ச்சி திட்டங்களிலும், நாட்டின் பாதுகாப்பிலும் மத்திய அரசு அக்கறை காட்டி வருகிறது! பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டின் சார்பில் நன்றி! அபிநந்தனை பாதுகாப்பாக இந்தியா கொண்டு வரும் பாரதப் பிரதமருக்கு நன்றி!

பயங்கரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுத்ததற்கு பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக எனது பாராட்டுகள். ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடி  பின்னால் நிற்கிறது, தமிழ்நாடும் அவர் பின்னால் நிற்கும்! இயற்கை பேரிடரிலிருந்து மீனவர்களை பாதுகாக்க, கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர்  இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தொடந்து, மதுரை ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டன! மதுரை – செட்டிகுளம் – நத்தம் நான்கு  வழிச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்! குமரி சாலை பாதுகாப்பு பூங்காவை பிரதமர் தொடங்கி வைத்தார். மார்த்தாண்டம் – பார்வதிபுரம்  மேம்பாலங்களை திறந்து வைத்தார். பணகுடி – கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையை அர்ப்பணித்தார். மதுரை – சென்னை தேஜாஸ் விரைவு  ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார்,

அதன் பின்னர் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அவரது பேச்சை பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா மொழிபெயர்த்து தமிழில் சொன்னார்.

அப்போது பேசிய மோடி, ஆளுநர், முதலமைச்சர், துணைமுதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! தமிழக அரசின் வளர்ச்சி நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பவையாக உள்ளன! அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது பெருமைக் குரியது! காந்தி அமைதி விருதைப் பெற்ற விவேகானந்தா கேந்திராவுக்கு பாராட்டுகள்! தேஜாஸ் ரயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக நவீன ரயிலாகும்! தேஜாஸ் ரயில் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ளது !

1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் அழிந்த பாம்பன் ரயில் தடம் புதுப்பிக்கப்பட உள்ளது. உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீடுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். பா.ஜ.க. தலைமையிலான அரசு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது, ஒரு கோடியே 10 லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டம் 24 நாட்களுக்குள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது!

ராஜாஜியின் பொருளாதார கனவை நிறைவேற்றும் வகையில் பாஜக அரசு செயல் படுகிறது. தொழில் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் 65 இடங்கள் இந்தியா முன்னேறி உள்ளது.  அம்பேத்கரை இருமுறை தோற்கடித்த கட்சி காங்கிரஸ். எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  திருத்தங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது!

பயங்கரவாத தாக்குதலுக்கு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும்! ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் என்ற திட்டத்தை பாஜக அரசு  நிறைவேற்றியுள்ளது!

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விமானி அபிநந்தனும் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறோம். உரி தாக்குதலுக்கு நமது ராணுவம் துணிச்சல் மிக்க பதிலடியை தந்தது. தற்போது புல்வாமா தாக்குதலுக்கும் நாம் துணிச்சலான பதிலடியை
தந்திருக்கிறோம் என்றார் பிரதமர் மோடி.

அவரது உரையின் முழு வடிவம் … காணொளி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version