இம்ரானிடம் இருந்து மோடி கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்று குஷ்பு டிவிட்டரில் போட்டாலும் போட்டார்… பலரும் அவரை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் பேசிய அந்நாட்டுப் பிரதமர்
இம்ரான் கான், ”அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார்” என்று அறிவித்தார்.

இதற்கு, காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவாளர்களும் டிவிட்டர் பதிவுகளிலும் அறிக்கைகளிலும் இம்ரான் கானை புகழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகள் இட்டுள்ளார்… அவற்றில்…

“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் உள்ளதா? நம் பிரதமருக்கு ஒரு பாடம் அவசியம்” என்று  ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு ட்வீட்டில், “விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களே நீங்கள் தாய்நாடு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இம்ரான் கானின் அன்பான செய்கைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் இவரது டிவீட்ட்க்கு இன்று பலத்த எதிர்ப்பும் சர்ச்சையும் கிளம்பியது. யார் யாரிடம் பாடம் கற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர் பலர். இந்நிலையில்,  மஞ்சுள் பர்ஸ்ட்போஸ்ட்.காம்  Manjul Firstpost.com தளத்தில் வரைந்துள்ள கார்ட்டூன் இன்று பலரது கவனத்தையும் பெற்றது. அதில் யார் யாரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தியுள்ளார் மஞ்சுள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...