spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகும்பமேளா துப்புரவு பணியாளர் நலனுக்கு சொந்த சேமிப்பில் இருந்து நிதி வழங்கிய பிரதமர் மோடி!

கும்பமேளா துப்புரவு பணியாளர் நலனுக்கு சொந்த சேமிப்பில் இருந்து நிதி வழங்கிய பிரதமர் மோடி!

- Advertisement -

Modi Pathapooja sweepersபுது தில்லி: உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து முடிந்த கும்பமேளாவில் சிறப்பாகப் பணி செய்த துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக, துப்புரவு பணியாளர் நல நிதிக்கு தனது சொந்த சேமிப்பில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ரூ.21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

கங்கை யமுனை சரஸ்வதி என மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கும்பமேளா கடந்த ஜன.15 ஆம்தேதி மகரசங்கராந்தியை முன்னிட்டு தொடங்கியது. இது சிவராத்திரி அன்று சில நாட்கள் முன் நிறைவடைந்தது.

இந்த கும்பமேளாவில் நாடு முழுவதிலும் இருந்து, 22 கோடி பேர் வரை புனித நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆறு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்தக் கும்பமேளாவில், தற்போது நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி புனித நீராடினார். மேலும், கும்பமேளா நடந்த பகுதியை துாய்மையாகப் பராமரித்த துப்புரவுப் பணியாளர்களைப் பாராட்டி அவர்களுக்கு பாத பூஜை செய்தார்.

இந்நிலையில் கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் நல நிதிக்கு, பிரதமர் மோடி தனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூ.21 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். இந்தத் தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அண்மையில் சியோல் அமைதி விருது பெற்றார். அந்த விருதுத் தொகை ரூ.1.30 கோடியை கங்கை தூய்மைப் பணியான நமாமி கங்கே-வுக்கு அப்படியே அளித்தார்.

மேலும், தனக்கு வந்த பரிசுப் பொருள்களை ஏலம் விட்டு கிடைத்த ரூ.3.40 கோடியை நமாமி கங்கே – கங்கை தூய்மைப் பணிக்கு கொடுத்தார்.

அதற்கு முன்னதாக 2015 ல் தனக்குக் கொடுக்கப் பட்ட பரிசுப் பொருள்களை ஏலம் விட்டுக் கிடைதத ரூ.8.33 கோடியை கங்கை தூய்மைப் பணிக்கு அளித்தார்.

குஜராத் மாநில முதல்வராக இருந்த போது தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாயை, குஜராத் அரசு ஊழியர்களின் குழந்தைகளுடைய கல்விக்காக நன்கொடை அளித்தார்.

குஜராத் மாநில முதல்வராக இருந்த போது தான் பெற்ற பரிசுப் பொருள்களை ஏலம் விட்டுக் கிடைத்த தொகை ரூ.89.96 கோடியை கன்ய கேலவானி நிதி  என்ற பெண் குழந்தைகள் கல்விக்காக அளித்தார். அந்த வரிசையில் தற்போது ரூ.21 லட்சத்தை கும்பமேளா துப்புரவுப் பணியாளர்கள் நல நிதிக்கு அளித்துள்ளார்.

Prime Minister Narendra Modi donated Rs. 21 lakh from his personal savings to the corpus fund for the welfare of sanitation workers of Kumbh Mela. This is just the latest in the series of such steps taken by PM Modi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe