சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும்; அவசர கதியில் நடத்த முடியாது – திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் அதிரடியாக அறிவித்தது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் அந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இப்போது தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ளது