அங்கித் கேஷ்ரி மரணம்: ஐபிஎல் வீரர்கள் மௌன அஞ்சலி

ankit-cricketer-died புது தில்லி: உள்ளூர் கிளப் போட்டியில் விளையாடிய போது, காயம் அடைந்த அங்கித் கேஷ்ரி என்ற இளம் கிரிக்கெட் வீரர் இன்று காலை மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஐபிஎல் போட்டியில் இன்று வீரர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 17-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது. இதில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இன்று காலை கிளப் போட்டியின்போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்ற மேற்கு வங்க இளம் கிரிக்கெட் வீரர் அங்கித் கேஷ்ரி சக வீரருடன் மோதி காயம் பட்டு, இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, டெல்லி மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன் சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. மேலும், வீரர்கள் அனைவரும் தங்கள் கைகளில் கருப்புத் துணியும் கட்டியிருந்தனர். அங்கித் கேஷ்ரி மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள் சச்சின், கங்குலி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.