விவசாயி தற்கொலை: விசாரணைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

புது தில்லி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், விவசாயி கஜேந்திரா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லி நகர காவல் துறை ஆணையர் பஸ்சியைத் தொடர்பு கொண்டு பேசினார். சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதன்படி, புது தில்லி சரக காவல் துறை இணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ஆணையர் பஸ்சி உத்தரவிட்டார். அதேநேரம், போலீசாரின் அலட்சியப் போக்கே விவசாயியின் உயிரிழப்புக்குக் காரணம் என்று அரவிந்த் கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்று தெரிகிறது.