பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்க, இலவச தொலைபேசி எண்ணை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணைக்குப் பிறகுநீதிபதி, “கல்வி நிலையங்களில் பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், மாணவிகள் பாலியல் புகார் அளிக்க, இலவச தொலைபேசி எண்ணை ஏற்படுத்த வேண்டும். 8 வாரங்களுக்குள்இதனை கண்டிப்பாக செயல்படுத்தி இருக்க வேண்டும். திட்டம் செயல்படுத்திய பிறகு புகார் வந்தவுடன் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.
மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் யாரும், லாப நோக்கில் பணம் பெற்றுக்கொண்டு டியூஷன் எடுக்க கூடாது. அவ்வாறு எடுக்கும் ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும்உத்தரவிட்டுள்ளார்.