காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோயிலில் துலாபாரம் வழங்கியபோது, தராசு சங்கிலி அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சசிதரூர் தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.
கேரள மாநிலம் முழுவதும் இன்று விஷூ பண்டிகை(புத்தாண்டு) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கோயிலில் துலாபாரம் வழங்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், திருவனந்புரம் தொகுதி எம்.பி.சசிதரூர் முடிவு செய்தார்.
அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில் சசிதரூர் அமர்ந்து துலாபாரம் வழங்கிய நிலையில் எதிர்பாராத வகையில் திடீரென தராசின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் தராசில் அமர்ந்திருந்த சசிதரூர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சசி தரூரின் கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் ரத்தமானது.