கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.
கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வரிசையில் நின்று வாக்களித்தார். கண்ணூர் பகுதியில் உள்ள ஆர்.சி. அமலா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த பினராயி விஜயன், மக்களோடு, மக்களாக வரிசையில் நின்றார். தொடர்ந்து, தமது வாக்கை பதிவு செய்தார்.