தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணையில் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள் எனவும் நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த 3 , 4 ஆண்டுகளாக நீதித்துறை மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், நீதித்துறையை கட்டுப்படுத்தி இயக்க நினைப்பவர்களை கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.