கார் திருட்டு வழக்கில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.,கைது

கௌஹாத்தி: அஸ்ஸாமில் கார் திருட்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொள்ளை கும்பலுடன் தொடர்பிருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குரிய ரூமி நாத், தனது முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் இஸ்லாமிய மதத்துக்கு மாறி இரண்டாவதாக கடந்த 2012ல் ஜாகீர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ரூமி நாத்துக்கு அந்த மாநிலத்தில் உள்ள கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பிருப்பதாக பரவலாக புகார் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூமி நாத் கைது செய்யப்பட்டார். ரூமிநாத் கைது தொடர்பாக போலீஸ் அதிகாரி லால் பரூவா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ரூமி நாத் கைது செய்யப்பட்டு திஸ்பூர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, காவலில் எடுத்து தீவிரமாக விசாரிப்போம்.” என்றார். ரூமிநாத்துக்கு எதிராக கிரிமினல் சதித் திட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.