கேராளாவில் நிபா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளா சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா உறுதி படுத்தியுள்ளார்.
கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 22 கல்லூரி மாணவர் உட்பட 80க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கேரளாவை ஆட்டிப்படைத்தது நிபா வைரஸ். 17 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகினர். இந்த நிலையில் இந்த வருடம் மீண்டும் கேரளாவில் தீவிரமாக நிபா பாதிப்பு பரவி வருகிறது.
வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கேரள அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புனே நகரில் உள்ள virology துறைக்கு அனுப்பப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது.
அதில், அவர்களுக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை கேரளாவில் 86 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தனிப்பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரள மாநில அரசு எடுத்துள்ளது. கடந்த வருடம் கோழிக்கோடு பகுதியில் இதே போன்ற வைரஸ் தாக்கம் ஏற்பட்ட போது, அதை சமாளித்து அனுபவம் எங்களுக்கு இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.