அயோத்தியாவில் தீவிர தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், நேபாளத்தில் இருந்து உத்திர பிரதேசம் வழியாக தீவிரவாதிகள் அயோத்தியாவுக்கு வந்து தாக்குதல் நடத்த உள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதனால், அயோத்தியாவுக்கு வரும் பேருந்துகள் மற்றும் தொடர்வண்டிகளில் மட்டுமின்றி அங்குள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகளில் தீவிர ஆய்வு நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
அயோத்தி தாக்குதல் வழக்கின் வரும் 16ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதை முன்னிட்டு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக அயோத்தியில் ஏற்கனவே ஐந்து தீவிரவதிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் காஷ்மீரை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தனது 18 மக்களவை உறுப்பினர்களுடன் வரும் 16ம் தேதி அயோத்தி வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.