- Ads -
Home இந்தியா இவரிடம்தான் பாடம் படிக்கச் சொன்னார் குஷ்பு..! அந்த இம்ரான் கானை இன்று உலகமே விமர்சிக்கிறது!

இவரிடம்தான் பாடம் படிக்கச் சொன்னார் குஷ்பு..! அந்த இம்ரான் கானை இன்று உலகமே விமர்சிக்கிறது!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மரபுகளை மீறி இருக்கையில் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கிர்கிஸ்தான் தலைநகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது.

இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான்,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மரபுகளை மீறி இருக்கையில் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஹிந்துஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்!

இது தவிர பார்வையாளர்களாக உள்ள ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்! இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜிங்பிங், பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ:  இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் தலைவர்கள் பங்கேற்க வந்த போது ஒவ்வொருவரும் மற்றவர் வந்து சேரும் வரை, காத்திருந்து பின்னர் மொத்தமாக இருக்கையில் அமர்ந்தனர்! ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக இம்ரான்கான் நேராக வந்தவுடன் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து யாரும் அவரவர் இருக்கையில் அமராத நிலையில் தானும் எழுந்து நிற்க முற்பட்டார்! ஆனால் மீண்டும் என்ன நினைத்தாரோ அப்படியே இருக்கையில் அமர்ந்துகொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது

இம்ரான் கான், அண்மையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சவுதி அரேபியா சென்றார். அப்போதும் மரபுகளை மீறி சவூதி மன்னரிடம் பேசிய இம்ரான் கான் அவரது மொழிபெயர்ப்பாளரிடமும் பேசினார்.

பின்னர் தான் கூறியதை மொழிபெயர்ப்பாளர் மன்னரிடம் எடுத்துரைப்பதற்கு முன்னமேயே இம்ரான் கான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதுவும் கூட அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது!

இந்தியாவின் விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப் பட்ட போது, இம்ரானின் பெருந்தன்மை என்றும் அவரிடம் மோடி பாடம் கற்க வேண்டும் என்று காங்கிரஸைச் சேர்ந்த நடிகை குஷ்பு டிவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இப்போது, நடிகை குஷ்பு யாரிடம் பாடம் படிக்க வேண்டும் என்று கேள்வி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version