குஜராத்தில் கடந்த 1990-ம் ஆண்டில் நடந்த உயிரிழப்பு தொடர்பான வழக்கில் காவல் துறை உயர் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் போலீஸ் காவலில் கைது உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணை குஜராத்தின் ஜாம்நகர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த் நீதிபதிகள், இந்த வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும் இந்த வழக்கில் மேலும் 11 சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிய கடந்த வாரம் அவர் தங்கள் செய்த மனுவை ஏற்று கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இவர் கடந்த 2011ம் ஆண்டில் உரிய அனுமதி பெறாமல் பணிக்கு விடுப்பு எடுத்து கொண்டதற்காகவும், அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்திதற்காகவும் சஸ்பென்ட் செய்யப்பட்டார். பின்னர் 2015ம் ஆண்டில் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது