மும்பை கோரேகாவை சேர்ந்தவர் சேக் கபர் சேக், இவருக்கு வயது53. நட்சத்திர ஓட்டலில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் மின்சார ரயிலில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அச்சமயம் சர்னிரோடு ரயில் நிலையத்தில் ஒருவர் இவரது செல்போனை பறித்து கொண்டு ஓடினார்.
அவரை பிடிக்கும் முயற்சியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த சேக் கபர் சேக் ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த வாலிபரை தேடி வந்தனர்.
இதில் அவர் நாலச்சோப்ராவை சேர்ந்த சிவம் சிங், இவருக்கு வயது25 என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாலச்சோப்ராவில் வீட்டில் இருந்த சிவம் சிங்கை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவரது சகோதரர் சத்யம் சிங்கிற்கும் இதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இருவரும் இரட்டை சகோதரர்கள் ஆவர். இருவரும் சேர்ந்து 2005-ம் ஆண்டில் இருந்தே இதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரயில் பயணிகளிடம் செல்போன் பறிப்பதில் ஈடுபட்டு வந்ததும், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சத்யம் சிங்கையும் கைது செய்தனர்.