பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த டிசம்பர் மாதம் மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. மக்களவையின் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், நிலுவையில் இருந்த முத்தலாக் தடை மசோதா காலாவதியானது.
இந்நிலையில், இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மசோதாக்களின் பட்டியலில் முத்தலாக் மசோதா இடம் பெற்றுள்ளது. இதனையொட்டி, பாஜக உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அக்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது