இந்தியா – தினசரி தமிழ் https://dhinasari.com தினசரி தமிழ் செய்திகள் | Dhinasari - Daily Tamil News Wed, 21 Oct 2020 13:43:49 +0000 en-US hourly 1 https://i2.wp.com/dhinasari.com/wp-content/uploads/2020/04/cropped-dhinlogonew-1.jpg?fit=32%2C32&ssl=1 இந்தியா – தினசரி தமிழ் https://dhinasari.com 32 32 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சரவை குழு ஒப்புதல்! https://dhinasari.com/india-news/178316-bonus-for-central-govt-employees.html Wed, 21 Oct 2020 13:43:45 +0000 https://dhinasari.com/?p=178316

நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதனால் பலனடைவர்

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சரவை குழு ஒப்புதல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

prakash javadekar
prakash javadekar

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கெசட்டட் அந்தஸ்து இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2019-20 ஆம் நிதியாண்டிற்கு உற்பத்தி சார்ந்த மற்றும் உற்பத்தி சாராத போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால், மத்திய அரசுக்கு ரூ.3737 கோடி செலவு ஏற்படும் என்றும், நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதனால் பலனடைவர் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயதசமிக்கு முன்னர் போனஸ் தொகை வழங்கப்படும் என்றும் பிரகாஷ் ஜாவ்டேகர் அப்போது தெரிவித்தார்.

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சரவை குழு ஒப்புதல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
நீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்! https://dhinasari.com/latest-news/178290-expressing-anger-against-the-govt-farmers-climb-high-voltage-electric-tower-threateing-to-commit-mass-suicide.html Wed, 21 Oct 2020 11:47:55 +0000 https://dhinasari.com/?p=178290

தற்போது உள்ள அரசு தாம் பயிர் செய்யும் நிலங்களை காட்டு இலாகாவுக்கு சொந்தமானதாக முடிவு செய்தது என்று

நீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

farmers-in-telangana

பட்டா இருந்தாலும் விவசாய நிலங்களை பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். பட்டாவை புதுப்பித்துத் தர மறுக்கிறார்கள். ‘ரைத்து பந்து’ விவசாய உதவித் தொகையும் தருவதில்லை என்று தெலங்காணா மகபூபாபாத் மாவட்டம் பய்யாரம் மண்டலம் கஸ்தூரி நகரில் விவசாயிகள் ஹை டென்ஷன் மின்சார டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள்.

70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். 1500 ஏக்கரில் சென்ற அரசாங்கம் பட்டா கொடுத்தது. ஆனால் தற்போது உள்ள அரசு தாம் பயிர் செய்யும் நிலங்களை காட்டு இலாகாவுக்கு சொந்தமானதாக முடிவு செய்தது என்று வருந்தினார்கள்.

தங்களது சோளப் பயிருக்குத் தகுந்த விலை நிர்ணயிக்க வேண்டும். அதிகாரிகளும் தலைவர்களும் கண்டு கொள்வதில்லை. தமக்கு நீதி கிடைக்காவிடில் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மின்சார கோபுத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

நீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
தன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து! https://dhinasari.com/latest-news/178287-came-to-london-to-work-on-my-nutrtion-and-recovery-needs-with-gssi-said-pv-sindhu.html Wed, 21 Oct 2020 11:42:04 +0000 https://dhinasari.com/?p=178287

உண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரங்கள் செய்தால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

தன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

pvsindhu
pvsindhu
  • என் பெற்றோரின் அனுமதியுடன்தான் இங்கிலாந்து சென்றேன். பிவி சிந்து.
  • பொய்ப் பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டிய பிவி சிந்து.
  • தன்னைப் பற்றி பிரச்சாரமாகும் கதைகள் மீது பேட்மிட்டன் வேர்ல்டு சேம்பியன் பூசர்ல வெங்கட சிந்து பதிலளித்தார்.

தன் பெற்றோரின் அனுமதியோடு தான் லண்டன் சென்றதாகவும் அதேபோல் கோச் கோபிசந்தோடு தனக்கு எந்தவித அபிப்ராய பேதமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பொய்க் கதைகளை பிரச்சாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

பிவி சிந்து தற்போது லண்டனில் உள்ளார். ஃபிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்திவரும் பிவி சிந்து ஜி எஸ் எஸ் ஐ யோடு (கடோரெட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்) சேர்ந்து பணிபுரிகிறார். இதுதொடர்பான போட்டோக்களை அண்மையில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார்.

இதுகுறித்து… பிவி சிந்து நேஷனல் கேம்பை விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றும் குடும்பத்தாரோடு ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த முடிவு எடுத்துள்ளார் என்றும் ஒரு தேசிய மீடியா பொய் பிரச்சாரங்களை பரப்பியது. இந்த செய்திகளை தீவிரமாக கண்டித்த சிந்து செவ்வாயன்று இன்ஸ்டாகிராமில் அவைகளுக்கு ஒரு முடிவு கட்டினார்.

நியூட்ரிஷன் மற்றும் ரெக்கவரி தேவைகளுக்காக சில நாட்களுக்கு முன் நான் லண்டனுக்கு வந்தேன். என் பெற்றோரின் அனுமதியோடு தான் இங்கு வந்தேன். குடும்பத்தோடு எனக்கு எந்தவித அபிப்ராய பேதமும் இல்லை. என் நன்மைக்காக என் பெற்றோர் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளார்கள். என்னை இந்த நிலைமைக்கு அழைத்து வந்த அவர்களோடு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் குடும்பத்தாரோடு எனக்கு நல்ல தொடர்பு உள்ளது. அவர்களின் சப்போர்ட் எனக்கு எப்போதும் உள்ளது. தினமும் என் குடும்பத்தாரோடு நான் போனில் பேசி வருகிறேன். அதுமட்டுமின்றி என் கோச் மாஸ்டர் கோபிசந்து மற்றும் அவருடைய அகாடமியின் சௌகரியங்கள் விஷயத்திலும் கூட எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று தெளிவு படுத்தினார்.

அதேபோல் உண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரங்கள் செய்தால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

தன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
இன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை! https://dhinasari.com/latest-news/178266-police-commemoration-day.html Wed, 21 Oct 2020 07:26:47 +0000 https://dhinasari.com/?p=178266

மாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

modiji-1

காவலர் வீரவணக்க நாள் : தேசத்திற்கான சேவையின் போது தன்னுயிர் ஈந்த காவல்துறை தியாகிகளுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் நன்றி செலுத்துகிறோம்! அவர்களின் தியாகமும், சேவையும் இந்திய மக்களின் நினைவில் நீங்காமல் இருக்கும்! என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இன்று, நாடு முழுதும் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பணியின் போது உயிர்த்தியாகம் செய்த போலீசாருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

காஷ்மீர், லடாக் பகுதியில் 1959 அக்.21ல் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் நம் துணை ராணுவப் படையினர் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக அக்.21 ஆம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில், பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்படும். உயர் அதிகாரிகள் உட்பட போலீசார் அனைவரும், கைகளில் கறுப்புப் பட்டை அணிகின்றனர். 

police-vanakka-day

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 

நாடு முழுவதும் உள்ள நமது போலீஸாருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதே காவலர் நினைவு நாள். கடமையின்போது, உயிர்த்தியாகம் செய்த அனைத்து போலீஸாருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும். 

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து கொடூரமான குற்றங்களுக்கு தீர்வு காண்பது வரை, பேரழிவு காலத்தில் உதவி செய்வதில் இருந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவதை வரை நமது போலீசார் எப்போதும் சிறப்பான சேவை செய்கின்றனர். பொது மக்களுக்கு உதவ எப்போதும் தயார் நிலையில் இருக்கும் போலீஸார் குறித்து பெருமை கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நாடு முழுதும் முதலமைச்சர்கள் இது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்… தங்கள் குடும்பத்தினர் நலனைக்காட்டிலும், பொதுமக்களின் நலனே முக்கியம்” எனும் உயர்ந்த நோக்கில், விடுமுறை தினங்கள் இல்லாமல் தங்கள் வாழ்வியலை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் காவல்துறை நண்பர்களுக்கு தேசிய காவலர்கள் நினைவு தினத்தில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் அஞ்சலி செலுத்தினார்.

மாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்! https://dhinasari.com/india-news/178204-pm-modi-sharing-a-message-with-my-fellow-indians.html Tue, 20 Oct 2020 13:05:18 +0000 https://dhinasari.com/?p=178204

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு

தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

pm-modi
pm-modi

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு மணிக்கு தான் நாட்டு மக்களுக்கு ஒரு தகவல் கூறப் போவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிட்டிருந்தார்  

கொரோனா காலத்தில் இதுவரை 6 முறை உரையாற்றி உள்ளார் பிரதமர் மோடி. இன்று அவர் ஏழாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். 

அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது… 

கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவாக போராடி வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாட்டு மக்கள் வீடுகளை விட்டு வழக்கம் போல் வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.  நாட்டின் நிலைமை ஸ்திரத் தன்மையோடு நிலையானதாக உள்ளது. நாட்டின் பொருளாதாரமும் படிப்படியாக சீரடைந்து வருகிறது. 

நம் நாடு கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது என்றாலும்,  கொரோனா  ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்கவில்லை! அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 

pmmodi
pmmodi

அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. எனவே மக்கள் மிக்வும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளை விட இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மக்களைக் காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. 

கொரோனா நோயாளிகளுக்காக 90 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.  கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது என்றாலும், மக்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் புறக்கணிக்கக் கூடாது! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்!

மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வரும்போது, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் வெளியே வருவது அவர்களின் குடும்பத்திற்கே ஆபத்தாக முடியும்! 

தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலைக்கு  எதிராக பல நாடுகள் போராடத் தொடங்கி உள்ளன.  

உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே அரசின் அடுத்த இலக்கு. இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிக்கத் தேவையான திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.  தடுப்பூசிகள் இறுதிக் கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டு அவை மக்களுக்கு கொண்டுசேர்க்கப் படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்.

பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சிக்குரியது. அதே நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும்  பாதுகாப்பாக இருக்க வேண்டும்… – என்று கூறினார் பிரதமர் மோடி.

தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
பாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்! https://dhinasari.com/latest-news/178176-kushboo-condemn-kamalnath-for-his-item-remark.html Tue, 20 Oct 2020 09:51:34 +0000 https://dhinasari.com/?p=178176

பின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.

பாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

kushboo
kushboo

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக.,வில் இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இமார்தி தேவி என்பவரை ஐட்டம் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூகத் தளங்களில், குறிப்பாக, டிவிட்டர் பதிவுகளில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இமர்த்தி தேவி பெயரை அவர் குறிப்பிட்டுச் சொல்சாமல்… யார் அது… அவர் பேர் என்ன… ஆம்… அதான் அந்த ஐட்டம்… என்று, அந்த தொகுதியின் வேட்பாளரை அவர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குறிப்பிட்டுக் கூறினார்.

kamalnath
kamalnath

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருப்பதைப் போல, ஒரு பெண் தலைவரை ஐட்டம் என கூறிய கமல்நாத்துக்கு அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்புவும் தனது டிவிட்டர் பதிவில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸில் இருந்த வரை ராகுலின் ட்வீட்களை ரிடீவிட் செய்து வந்த குஷ்பு, பாஜக.,வில் இணைந்த பின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்வரை கண்டித்து ஒரு கருத்துப் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

பாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
பாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்! குவியும் கண்டனங்கள்! https://dhinasari.com/latest-news/178132-kamalnath-criticize-bjp-women-candidate-as-item.html Mon, 19 Oct 2020 17:12:49 +0000 https://dhinasari.com/?p=178132

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை

பாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்! குவியும் கண்டனங்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

kamalnath
kamalnath

மத்தியப் பிரதேச மாநில  இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக., பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக.,வில் சேர்ந்த இமார்தி தேவி என்பவருக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தாப்ரா தொகுதியில் போட்டியிட பாஜக., வாய்ப்பு அளித்துள்ளது.  இந்நிலையில் தாப்ராவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கமல்நாத் பேசியபோது,  இமார்தி தேவியை ஐட்டம்  என்று சொல்லி.. கேனத்தனமாக சிரித்தார். அவரது சிரிப்பும், உள்நோக்கத்துடன் ஐட்டம் என்று கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

bjp-lady
bjp-lady

முன்னதாக, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 21 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் பாஜக.,வில் சேர்ந்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் பாஜக.,வின் சிவராஜ் சிங் சவுகான்  முதல்வர் ஆனார். காங்கிரஸார் ராஜினாமா செய்த தொகுதிகளில் நவ.,3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்நிலையில் காங்கிரஸில் இருந்து பாஜக.,விற்கு சென்ற முன்னாள் பெண் அமைச்சர் இமர்தி தேவிக்கு இடைத்தேர்தலில் பாஜக., வாய்ப்பு அளித்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக  பிரசாரம் செய்த கமல்நாத்,  ‛எங்கள் வேட்பாளர் மிகவும் எளிமையானவர். எதிரணியில் இருப்பவரைப் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த ஐட்டம் பெயரை நான் சொல்ல வேண்டுமா?’ என்று வினவினார்.

கமல்நாத்தின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

கேவலமாகப் பேசியதுடன், கேனத்தனமாக உள்நோக்கத்துடன் சிரித்த கமல்நாத்துக்கு டிவிட்டரில் பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

பாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்! குவியும் கண்டனங்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
ஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’! https://dhinasari.com/latest-news/178117-tarlupadu-veerabrahmendra-sami-temple-kalasa-theft.html Mon, 19 Oct 2020 15:46:18 +0000 https://dhinasari.com/?p=178117

ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது

ஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

tarlupadu-veerabarda-swami-temple
tarlupadu-veerabarda-swami-temple

ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டம் தர்லுபாடு கிராமத்தில் உள்ள புராதனமான ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய கலசத்தை சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மனிதர்கள் சிதைத்துள்ளார்கள்.

இதுகுறித்து ஞாயிறன்று எஸ்பி சித்தார்த்த கௌசல் மற்றும் சிஐகள் வி ஶ்ரீராம், கேவீ ராகவேந்திரா சம்பவ இடத்தை சென்று சோதனை இட்டனர். புதையலுக்காக கோபுரக் கலசத்தை நீக்கிவிட்டு தேடி உள்ளதாக எஸ்பி சித்தார்த் தகவல் வெளியிட்டார்.

ஆலயத்தின் கோபுரம் மேல் உள்ள கலசத்திற்கு மஞ்சள் குங்குமம் தடவி பூஜை செய்துவிட்டு அதை சுற்றி உள்ள கான்க்ரீட்டை நீக்கி இருக்கிறார்கள்.

புராதனமான வீரபத்திர சுவாமி ஆலயத்தில் கலசத்தை ஸ்தாபித்த போது அதில் ஏதாவது மதிப்பு மிகுந்த பொருட்கள் இருக்கும் வாய்ப்பு இருந்தால் அதை திருடி கொள்ளலாம் என்ற உத்தேசத்தோடு திருடர்கள் அந்த வேலையை செய்து உள்ளார்கள் என்று போலீஸார் சந்தேகத்தை வெளியிட்டார்கள்.

உள்ளூர் பிஜேபி தலைவர்கள் ஞாயிறு அன்று இரவு ஆலயம் அருகில் வந்து சற்று நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

tarlupadu-veerabarda-swami-temple-protest
tarlupadu-veerabarda-swami-temple-protest

மறைத்து வைத்த புதையல் இருக்கும் என்ற எண்ணத்தில் பிரகாசம் மாவட்டத்தில் கோவிலின் கோபுர கலசத்தை சிதைத்திருப்பார்கள் என்பது போலீசாரின் சந்தேகம்.

பல நூற்றாண்டு கால வரலாறு படைத்த வீரபத்திர சுவாமி ஆலய கலசத்திற்கு பூஜைகள் செய்துவிட்டு திருட்டு நடத்தியுள்ளது புதையலுக்காகவே என்று மாவட்ட எஸ்பி சித்தார்த் கௌசல் தகவல் தெரிவித்தார்.

தர்லுபாடு கிராமத்தில் உள்ள இந்த கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் உற்சவங்களுக்கு கர்னூல், குண்டூர் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பெரிய அளவில் பக்தர்கள் வந்து சேர்வார்கள்.

tarlupadu-veerabarda-swami-temple1
tarlupadu-veerabarda-swami-temple1

ஆலய கலசத்தை சிதைத்தார்கள் என்ற விஷயம் அறிந்த உள்ளூர் பிஜேபி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதம் வந்த பின்பே நிலைமை சீரானது. திருடர்களை பிடிக்க தனி குழு அமைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அண்மையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது வருத்தத்துக்குரியது.

ஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
கேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை! மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை! https://dhinasari.com/latest-news/178116-otp-introduced-in-gas-cylinder-delivery-system.html Mon, 19 Oct 2020 15:30:48 +0000 https://dhinasari.com/?p=178116

இந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை! மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

GAS CELINDAR
GAS CELINDAR

கேஸ் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு எச்சரிக்கை… நவம்பர் 1 முதல் புது சட்டங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் உங்களுக்கு இனி நோ சிலிண்டர். ..

எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக் செய்ய வேண்டும் என்று பார்க்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் புதிய செய்திகளை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் மாதத்திலிருந்து புதிய டெலிவரி ரூல்ஸ் அமலுக்கு வருகின்றன. இதன்படி நீங்கள் கட்டாயம் கோட் கூற வேண்டி வரும்.

கேஸ் சிலிண்டர் ரூலில் மாற்றங்கள் வரும் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. கேஸ் சிலிண்டர் டெலிவரி நிபந்தனைகளில் மாற்றம் நிகழப் போகிறது. ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் வரும் மாதத்திலிருந்து புதிய ரூல்ஸ் எடுத்து வருகின்றன.

கன்சூமர் உரிமைகளை காப்பாற்றுவதற்கும் கேஸ் சிலிண்டர் மோசடிகளைத் தடுப்பதற்கும் கம்பெனிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. புதிய டெலிவரி சிஸ்டம் எவ்வாறு இருக்கப் போகிறதோ?!

ஒரு முறை தெரிந்து கொள்வோம்…

gas 1
gas 1

கேஸ் சிலிண்டர் புதிய ஹோம் டெலிவரி சிஸ்டத்திற்கு டிஎசி என்று பெயர் வைத்துள்ளார்கள். டிஎசி என்றால் டெலிவரி ஆதென்டிகேஷன்கோட் என்று பொருள்.

கேஸ் சிலிண்டர் புக் செய்தால் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வந்துவிடாது. மீண்டும் நீங்கள் இந்த கோட் நம்பரை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் புக் செய்த பின் ரிஜிஸ்டர் செய்த மொபைல் நம்பருக்கு மெசேஜ் வரும். டெலிவரி பாயிடம் இந்த கோட் கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி ஆகும். அப்போது வரை கோட் உங்களிடமே இருக்கும் .

ஒரு வேளை கேஸ் சிலிண்டர் பெறுபவர் அவருடைய மொபைல் நம்பரை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டரோடு ரெஜிஸ்டர் செய்து கொள்ளாமல் இருந்தால் டெலிவரி பாயிடம் உள்ள மொபைல் போனில் ஒரு ஆப் இருக்கும். அதன் மூலம் கேஸ் சிலிண்டர் பெறுபவர் அப்போதைக்கப்போது மொபைல் நம்பர் அப்டேட் செய்து கொள்ளலாம். அதன் பின் கோட் வரும்.

இங்கு ஒரு விஷயம் நினைவு கொள்ளவேண்டும். மொபைல் நம்பரை தவறாக அளித்தவர்கள் அல்லது அட்ரஸ் தவறாக அளித்தவர்கள் கேஸ் சிலிண்டர் டெலிவரியின்போது தொல்லைக்கு உள்ளாவர். இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி நின்று போகும்.

ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் முதன் முறையாக 100 நகரங்களில் இந்த டெலிவரி கோட் அமைப்பினை எடுத்து வருகிறார்கள். அதன்பிறகு வரிசைக் கிரமத்தில் பிற நகரங்களுக்கு கூட இந்த சேவைகளை விரிவுபடுத்துவார்கள்.

இந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. கமர்சியல் கேஸ் சிலிண்டர்களுக்கு இது பொருந்தாது.

கேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை! மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
சும்மா கத்தாதம்மா…! நீ எனக்கு ஓட்டு போட்டியா… என்ன? https://dhinasari.com/latest-news/177971-telangana-deputy-speaker-ask-a-woman-is-she-voted-for-him.html Sun, 18 Oct 2020 13:32:46 +0000 https://dhinasari.com/?p=177971

"சும்மா கத்தாதம்மா… நீ ஏதாவது எனக்கு ஓட்டுப்போட்டாயா, என்ன?" என்று சீரியஸாக பதில் கூறினார்.

சும்மா கத்தாதம்மா…! நீ எனக்கு ஓட்டு போட்டியா… என்ன? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

telangana-mla
telangana-mla

ஹைதராபாதில் பெரும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு… அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசச் சென்ற துணை சபாநாயகர் பத்மாராவு பொறுமை இழந்து எரிந்து விழுந்தார்.

“ஓட்டுப் போடுவதற்கு மட்டும் நாங்கள் வேண்டும். ஆனால் கஷ்டத்தில் இருக்கும் போது உதவி புரிய வர மாட்டீர்களா? மூன்று நாட்களாக தண்ணீரிலேயே வாழ்கிறோம். இப்போதுதான் வருகிறீர்களா?” என்று நேரடியாக கேள்வி கேட்ட பெண்களிடம் அவர் எதிர்க் கேள்வி கேட்டார்.

“சும்மா கத்தாதம்மா… நீ ஏதாவது எனக்கு ஓட்டுப்போட்டாயா, என்ன?” என்று சீரியஸாக பதில் கூறினார்.

சனிக்கிழமை ஐதராபாத்தில் தார்னாகா டிவிஷன் லாலாப் பேட்டையில் டிப்யூடி ஸ்பீக்கர் பத்மாராவு கௌட் சுற்றுப்பயணம் செய்தார். உள்ளூர் கார்ப்பரேடர் சரஸ்வதி, ஜிஹெச்எம்சி அதிகாரிகளோடு சேர்ந்து லாலாப்பேட்ட, சந்திரபாபு நாயுடுநகர் மற்றும் பிற இடங்களுக்குச் சென்றார். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் அவரை நேரடியாக கேள்வி கேட்டார்கள்.

” வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து… சாப்பிடுவதற்கு உணவில்லாத சூழ்நிலையில் நாங்களெல்லாம் இவ்வளவு சிரமத்தில் இருக்கையில் இந்தப் பக்கம் நீங்கள் திரும்பி கூட பார்க்கவில்லை. நிலைமை சாதாரண நிலைக்கு வந்த பிறகு இப்போதா வருவது?” என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

” மழை பெய்தால் மட்டும்தான் இந்த பக்கம் திரும்பி பார்ப்பீர்களா, சார்? இது எப்பவும் இருக்கிறதுதானே…! இதைவிட வேறென்ன எதிர்பார்ப்பது உங்களிடம்?” என்று மேலும் சிலர் கேட்டார்கள்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பத்மராவு கௌட், “லாரியில் அரிசி எடுத்து வந்திருக்கிறோம். எல்லாருக்கும் வினியோகிக்கப் போகிறோம்” என்று விவரிக்க முயற்சி செய்தார்.

” நீங்கள் கொடுக்கப்போகும் அரிசிக்காக காத்துக் கொண்டிருக்க சொல்கிறீர்களா? மூன்று நாட்களாக எங்களைப் பற்றி கவலைப்படாமல் இப்பொழுது லாரி வருகிறது… அரிசி வருகிறது என்று கூறுகிறீர்களே… இன்னும் வந்து கொண்டே இருக்கிறதா? அல்லது வந்துவிட்டதா?” என்று பெண்கள் எரிந்து விழுந்தார்கள்.

அதனால் பத்மாராவு கௌட் பலரையும் விசாரிக்காமலேயே சென்றுவிட்டார். ஒரு முதியவர் மழையில் இடிந்து விழுந்த தன் வீட்டின் சுற்றுச்சுவரை காட்டுவதற்காக எதிர்பார்த்து நின்று இருந்தார். அவரை கண்டு கொள்ளாமல் பத்மாராவு, கார்ப்பரேட் அதிகாரிகளோடு சென்று விட்டார்.

” என் கஷ்டங்களை கூறிக் கொள்ளலாம் என்று பார்த்தால் திரும்பி கூட பார்க்காமல் போகிறாரே…! பின் எதற்காக வந்தாராம்? எதற்காக போனாராம்?” என்று அந்த பெரியவர் ஆத்திரம் அடைந்தார்.

சும்மா கத்தாதம்மா…! நீ எனக்கு ஓட்டு போட்டியா… என்ன? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
சீனாவுக்கான எச்சரிக்கை! வெற்றிகரமாக சோதிக்கப் பட்ட பிரமோஸ் ஏவுகணை! https://dhinasari.com/latest-news/177959-brahoms-tested-successfully-today.html Sun, 18 Oct 2020 09:47:42 +0000 https://dhinasari.com/?p=177959

பிரமோஸ் ஏவுகணை அக்.18 இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

சீனாவுக்கான எச்சரிக்கை! வெற்றிகரமாக சோதிக்கப் பட்ட பிரமோஸ் ஏவுகணை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

brahmos
brahmos

பிரமோஸ் ஏவுகணை அக்.18 இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

அரபிக்கடலில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

இன்றைய பிரம்மோஸ் ஏவுகணை சோதனை பற்றி அறிய மூன்று விஷயங்கள்:

 1. ஆணையிடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய கடற்படையின் புதிய அழிக்கும் ஐ.என்.எஸ் சென்னை இன்று இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரம்மோஸின் வெற்றிகரமான சோதனை துப்பாக்கிச் சூடு மூலம் உலகின் முதல் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையுடன் தனது ஆயுதத்தை உறுதிப்படுத்தியது.

 2. ஏவுகணை, 7,500 டன் போர்க்கப்பலில் இருந்து சுடப்பட்டது, அதன் நோக்கம் கொண்ட மேற்பரப்பு இலக்கை சோதனை-புத்தக துல்லியத்துடன் ஈர்ப்பு-மீறும் சூழ்ச்சிகளுக்குப் பிறகு தாக்கியது, இது கடல்-சறுக்குதலை மூன்று முதல் நான்கு மீட்டர் வரை சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்க உதவுகிறது.  எதிரி ரேடார் மற்றும் கண்காணிப்பை மீறுதல்.

 3. லடாக்கில் கம்யூனிஸ்ட் சீனாவுடனான தற்போதைய நில எல்லை இராணுவ மோதல்கள் கடல் களத்திற்கு விரிவடைந்தால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் வழித்தடங்களை முற்றுகையிடுவதற்கான ஒரு முக்கிய கடற்படை தளமாக ஐ.என்.எஸ் சென்னை இருக்கும்.

சீனாவுக்கான எச்சரிக்கை! வெற்றிகரமாக சோதிக்கப் பட்ட பிரமோஸ் ஏவுகணை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
பக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்! https://dhinasari.com/latest-news/177948-tirupati-balaji-temple-decides-to-invest-in-state-central-securities-devotees-cry-foul.html Sun, 18 Oct 2020 08:35:01 +0000 https://dhinasari.com/?p=177948

காலையிலிருந்தே விவாதம் எழுந்ததால் முடிவிலிருந்து பின்வாங்கிய திருமலா திருப்பதி தேவஸ்தானம்.

பக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

tirumalathirupathi
tirumalathirupathi

காலையிலிருந்தே விவாதம் எழுந்ததால் முடிவிலிருந்து பின்வாங்கிய திருமலா திருப்பதி தேவஸ்தானம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அடிக்கடி விவாதங்களில் சிக்கி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்பனைக்கு வைத்ததால் மிகப்பெரும் விவாதமும் பரபரப்பும் எழும்பியது. பக்தர்கள் அளித்த சொத்துகள் சிலவற்றை விற்பதற்கு வைத்தார்கள் என்ற செய்தி வந்ததால் பெரிய அளவில் விவாதம் எழும்பியது. இந்த விவாதம் நாடு தழுவிய அளவில் நடந்ததால் திருமலா திருப்பதி தேவஸ்தானம் பின்வாங்கியது.

ஆனால் இனிமேலாவது விவாதத்திற்கு உள்ளாக மாட்டார்கள் என்று நினைத்தால் மீண்டும் ஒரு செய்தி காலையிலிருந்து விவாதத்தில் இடம்பெற்று வருகிறது. இது நாடு தழுவிய அளவில் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

ஸ்ரீவாரி ஆலயத்துக்கு சொந்தமான தொகையை வங்கிகளில் மட்டும் அன்றி மாநில அரசாங்க செக்யூரிட்டி பாண்டுகளாகவும் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்ததால் மீண்டும் ஒருமுறை திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பக்தர்கள் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அரசியல் கட்சிகளுக்கு அதீதமாக அனைவரும் இந்த விஷயத்தை கண்டித்து உள்ளார்கள். அரசாங்கம் இந்த செயலை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் செய்வோம் என்று திருமலையில் போராட்டம் தொடங்கினார்கள்.

இந்த விஷயம் குறித்து காலையிலிருந்தே பரபரப்பு நிலவி வருகிறது. ஹிந்து மதத்திற்கு ஒரு ஆன்மிக தலைநகராக திருமலை விளங்கிவரும் நிலையில் இங்கு எந்த சின்ன முடிவு எடுத்துக்கொண்டாலும் பக்தர்கள் அதற்கு உடனடியாக எதிர்விளைவு எடுப்பது வழக்கம்.

புதிய அரசாங்கம் வந்தபின்பு திருமலா திருப்பதி தேவஸ்தானம் எடுத்துக்கொள்ளும் முடிவுகள் அனைத்தும் விவாதத்திற்கு வழிவகுக்கின்றன. இன்று பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் பணம் அரசாங்கத்தின் பணம் அல்ல என்பதால் அங்கு செக்யூரிட்டி பாண்டுகளில் டெபாசிட் செய்யும் முடிவு எடுத்ததோடு, வங்கிகளைவிட அரசாங்கம் அதிக வட்டி அளிக்கும் என்றும் சாமர்த்தியமாக கூறியதன் மீது காலையிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு பதிவு செய்வதோடு கூட போராட்டத்தில் ஈடுபடவும் பக்தர்கள் தயாராகிவிட்டார்கள் .
நாளையிலிருந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். மக்களின் ஆத்திரத்தை கவனித்த அரசாங்கம், திருமலா திருப்பதி தேவஸ்தானம் வழியாக பத்திரிகைகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட வைத்தது.

தாம் இந்த நிர்ணயத்தை அமுல்படுத்தப் போவதில்லை என்றும் எப்போதும் போலவே டெபாசிட்டுகள் அனைத்தும் வங்கிகளிலேயே செய்வோம் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவித்தார்கள். பாண்டுகள் வடிவத்தில் அரசாங்க செக்யூரிட்டியில் டெபாசிட் செய்யவேண்டும் என்ற முடிவில் பின்வாங்கினார்கள்.

இதனால் நாளை நடக்க இருந்த போராட்ட நிகழ்ச்சி ஒத்திவைக்கப் படும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் பக்தர்களின் ஆத்திரத்தால் மீண்டும் ஒருமுறை டிடிடி தன் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

பக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
நவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா! https://dhinasari.com/latest-news/177914-navratri-first-day-vijayawada-kanakadurga-amman.html Sun, 18 Oct 2020 04:09:50 +0000 https://dhinasari.com/?p=177914

10 வயதுக்கு உள்ளாகவும், 65 வயதிற்கு மேலாகவும் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அனுமதி இல்லை.

நவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

vijayawada-kanakadurga-navratri
vijayawada-kanakadurga-navratri

நவராத்திரி முதல்நாள் ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன்.

இந்திரகீலாத்ரி மலைமீது சரந் நவராத்திரி உற்சவங்கள் கண்ணுக்கு விருந்தாக ஆரம்பமாகியுள்ளன. முதல் நாள் சுவர்ண கவச அலங்காரத்தில் துர்க்கா தேவி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாள்.

நகர போலீஸ் கமிஷனர் பத்துல ஸ்ரீனிவாசுலு, ஈஓ சுரேஷ்பாபு தம்பதிகள் அம்மனுக்கு முதல் பூஜை நடத்தினார்கள். சுவர்ண கவச அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால் சகல தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

vijayawada-kanakadurga-navratri1
vijayawada-kanakadurga-navratri1

நவராத்திரி உற்சவங்களின் முதல் நாள் ஆனதால் காலை 3 மணிக்கு சுப்ரபாத சேவையோடு தொடங்கி ஸ்நபனாபிஷேகம், பால போக நிவேதனம், நித்ய அர்ச்சனை ஆகியவற்றை பூர்த்தி செய்து ஒன்பது மணியிலிருந்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்தார்கள்.

முதலில் டிக்கெட் உள்ளவர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதித்தார்கள். சுமார் நான்காயிரம் போலீசார் உற்சவங்களில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒவ்வொரு மணிக்கும் ஒரு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அம்மனை தரிசிக்கும் ஏற்பாடு செய்திருந்ததாக கனகதுர்கா கோவில் ஈஓ சுரேஷ்பாபு தெரிவித்தார்.

கனகதுர்காதேவி தேவஸ்தானத்தில் ஒவ்வொரு ஆண்டும் உற்சவங்களின் ஒருபகுதியாக நடத்தும் ஆர்ஜித சேவைகளான லட்ச குங்குமார்ச்சனை, ஸ்ரீசக்கர நவாவரண அர்ச்சனை, சண்டீ யாகங்களை கோவிட் சூழ்நிலை காரணமாக பக்தர்களின் பிரதிநிதிகளாக ரித்விக்குகள் நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.

இந்திரகீலாத்ரி மலை மீது நடக்கும் தசரா உற்சவங்களுக்கு பிரத்தியேக அதிகாரியாக சந்திரசேகர் ஆஜாதை அறநிலையத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. மீடியா கோஆர்டினேடராக சீதா டைரக்டர் ராமச்சந்திர ராவை நியமித்துள்ளார்கள்.

மலையின் கீழ் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து க்யூ வரிசை தொடங்குகிறது. மலையின் கீழ் மூன்று க்யூ வரிசைகளாகத் தொடங்கி மேலே வந்தபின் ஓம் டர்னிங் அருகில் ஐந்து வரிசைகளாக விரிகிறது. அங்கிருந்து இலவச, நூறு ரூபாய், 300 ரூபாய் லைன்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அம்மனின் தரிசனம் செய்து கொண்டபின் பக்தர்கள் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வருவார்கள். கீழே பிரசாதம் கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த வருடம் அன்னதானம் ஏற்பாடுகள் செய்ய வில்லை.

vijayawada-kanakadurga-navratri2
vijayawada-kanakadurga-navratri2

பக்தர்கள் கவனத்திற்கு:

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கைகளுக்கு கிளவுஸ் அணிவது கட்டாயம். லைனில் சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு போடப்பட்ட வட்டங்களில் மட்டுமே நிற்க வேண்டும். பக்தர்கள் தாங்கள் குடிக்கும் தண்ணீரை தாங்களே பாட்டில்களில் எடுத்து வரவேண்டும்.

10 வயதுக்கு உள்ளாகவும், 65 வயதிற்கு மேலாகவும் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அனுமதி இல்லை. டிக்கெட் எடுத்து வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்பாகவே இருக்க வேண்டும். ஆலயத்தில் லிஃப்ட், பஸ் வசதிகள் இல்லை.

காட் ரோடு வழியை முழுவதுமாக அடைத்து விட்டார்கள். பக்தர்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பதற்கு க்ளோக் ரூம்கள் மலையின் கீழே ரதம் சென்டர் அருகில் இருக்கின்றன.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

நவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது… அரசு விரைவில் முடிவு! https://dhinasari.com/latest-news/177780-minimum-age-for-marriage-will-be-revised-soon.html Sat, 17 Oct 2020 10:04:32 +0000 https://dhinasari.com/?p=177780

ஆணுக்கு 21 வயது எனவும், பெண்ணுக்கு 18 எனவும் உள்ளது. இது வருங்காலத்தில் பெண்ணுக்கு 21 வயது என அதிகரிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.

பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது… அரசு விரைவில் முடிவு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

pm-modi
pm-modi

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் எனபிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு, 1945ஆம் ஆண்டு ஐநா சபையால் எப்ஏஓ எனப்படும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் அக்.16 வெள்ளிக்கிழமை அன்று 75 ரூபாய் நாணத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

17 புதிய வகையான 8 பயிர்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களான, நெல், கரும்பு, கோதுமை உள்ளிட்டவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசே கொள்முதல் செய்வது ஆகியவை நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முக்கியமான பகுதி என்று சுட்டிக் காட்டினார். மேலும், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த முயற்சிகளை தொய்வின்றி மேற்கொள்ள தமது தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.

தொடர்ந்து, அன்பு மகள்களான நமது பெண் பிள்ளைகளின் குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் குறித்த கருத்துப்பகிர்வு விவாதம், ஆலோசனைகள் ஆகியவை நடைபெறுவதாக பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார். தாம் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதைப் போல, அன்பு மகள்களின் திருமணத்துக்கான சரியான வயதை நிர்ணயம் செய்யவும், முடிவு செய்யவும் அமைக்கப்பட்ட குழு அது குறித்து ஆய்வு செய்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது குறைந்தபட்ச திருமண வயது ஆணுக்கு 21 வயது எனவும், பெண்ணுக்கு 18 எனவும் உள்ளது. இது வருங்காலத்தில் பெண்ணுக்கு 21 வயது என அதிகரிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.

பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது… அரசு விரைவில் முடிவு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
நவராத்திரி தொடக்கம்… மலைமகள் அருளால் நல்லது நடக்கும்: பிரதமர் மோடி வாழ்த்து! https://dhinasari.com/latest-news/177789-pm-modi-navratri-wishes.html Sat, 17 Oct 2020 05:21:09 +0000 https://dhinasari.com/?p=177789

இந்நாளில் அனைவரும் ஆரோக்கியமும், செல்வ வளமும் பெறட்டும் என அவரது டிவிட்டர்பதிவில் குறிப்பிட்டுள்ளார்

நவராத்திரி தொடக்கம்… மலைமகள் அருளால் நல்லது நடக்கும்: பிரதமர் மோடி வாழ்த்து! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

navarathri-wishes
navarathri-wishes

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நாளில் அனைவரும் ஆரோக்கியமும், செல்வ வளமும் பெறட்டும் என அவரது  டிவிட்டர்பதிவில் குறிப்பிட்டுள்ளார் 

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான இன்று மாதா சைலபுத்ரியை (மலைமகள்) வணங்குவோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. 

மலைமகளின் பேரருளால் நம் பூமி பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளமுடையதாகவும் மாறட்டும் என்று குறிப்பிட்டுள்ள மோடி, ஏழைகள் மற்றும் சமூகத்தில் அடிநிலையில் இருப்பவர்களின் வாழ்வில் நல்ல மாற்றமும் வலிமையும் வரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

நவராத்திரி தொடக்கம்… மலைமகள் அருளால் நல்லது நடக்கும்: பிரதமர் மோடி வாழ்த்து! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
தெலங்காணாவில் பதுக்கம்மா பண்டிகை! தமிழிசை வாழ்த்து! https://dhinasari.com/latest-news/177748-bathukamma-wishes-to-people-of-telangana.html Fri, 16 Oct 2020 16:15:13 +0000 https://dhinasari.com/?p=177748

பதுக்கம்மா பண்டிகைக்காக தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

தெலங்காணாவில் பதுக்கம்மா பண்டிகை! தமிழிசை வாழ்த்து! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

padukkamma-festiv-1
padukkamma-festiv-1

இன்றிலிருந்து தெலங்காணா பதுக்கம்மா பண்டிகை. இந்த ஆண்டு வீட்டிலேயே இந்த பூக்களின் பண்டிகையை கொண்டாட சொல்லி அரசு அறிவிப்பு.

தெலங்காணா பண்பாட்டையும் சம்பிரதாயங்களையும் பிரதிபலிக்கும் பதுக்கம்மா பண்டிகை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. ஒன்பது நாட்கள் நவராத்திரியை ஒட்டி இந்த பண்டிகை நடைபெறும்.

நூறாண்டு வரலாறு கொண்ட இந்த பதுக்கம்மா உற்சவங்கள் 2014ல் தெலங்காணா மாநிலம் ஏற்பட்ட பிறகு அரசு பண்டிகையாக அறிவித்து நடத்தி வருகிறது.

padukkamma-festival-1
padukkamma-festival-1

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் மிகவும் பிடித்தமான இந்த பண்டிகையின் முதல் நாள் ‘எச்சில் பூ பதுக்கம்மா ‘ என்றும் இறுதி நாள் ‘பழைய சாதம் பதுக்கம்மா’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த முறை கொரோனா மற்றும் பெரு மழையின் காரணமாக பதுக்கம்மா பண்டிகை சற்று உற்சாகம் குறைந்து காணப்படுகிறது. வீட்டிலேயே பண்டிகையை கொண்டாடும் படி அரசு அறிவித்துள்ளது.

பதுக்கம்மா பண்டிகையை முன்னிட்டு பெண்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெலங்காணா ஜாக்ருதி தலைவர் எம்எல்சி கல்வகுண்ட்ல கவிதா குறிப்பிட்டார். பிரத்தியேக சூழ்நிலைகளில் இந்த பண்டிகையை கடைபிடிப்பதால் ஒவ்வொருவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி விட்டு ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பண்டிகையை முன்னிட்டு ‘தெலங்காணா ஜாக்ருதி’ 3 வீடியோ பாடல்களையும் ஒன்பது பாடல்களோடு கூடிய சிடிக்களையும் வெளியிட்டது.

padukkamma-festival2-1
padukkamma-festival2-1

தெலங்காணா அரசங்கம் பண்டிகைக்கு முன்பாகவே ஒவ்வொரு வீட்டிற்கும் பதுக்கம்மா புடவைகளை பெண்களுக்காக அளித்தது. மாநில அரசாங்கம் பதுக்கம்மா காணிக்கையாக அளித்த புடவைகளை ஒரு கிராமத்தில் தோட்டத்திற்கு வேலியாக சிலர் கட்டினார்கள்.

ராஜன்னா சிர்சிலா மாவட்டம் தங்கள்ளபல்லி மண்டலத்திலுள்ள கன்டில்சபேட்ட கிராமத்தில் ஒருவர் தன் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்திற்கு ஆடு மாடுகள் மேயாமல் இருப்பதற்காக புடவைகளை வேலியாக கட்டியுள்ளார். ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டதற்கு சென்ற ஆண்டு கொடுத்த பதுக்கம்மா புடவைகளை இன்னும் கட்டாமல் அப்படியே இருக்கிறது என்று தெரிவித்தார்.

கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் விதமாக பெண்களுக்கு பண்டிகை காணிக்கையாக படவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு மாநில அரசாங்கம் கடைப்பிடிக்கும் பதக்கம்மா புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநில அளவில் தொடங்கியது. இந்த மாதம் நவராத்திரி யோடு தொடங்கும் பதுக்கம்மா பண்டிகையை முன்னிட்டு புடவைகள் விநியோகத்தை செய்துள்ளார்கள்.

இந்த ஆண்டு ஒரு கோடி புடவைகள் விநியோகம் செய்யவேண்டும் என்ற இலக்கோடு அந்தந்த மாவட்டங்களுக்கு 98.5 லட்சம் புடவைகளை அனுப்பியுள்ளார்கள். மாவட்டங்களில் புடவை விநியோகம் தொடர்ந்து நடந்து வருகிறது.

பதுக்கம்மா பண்டிகைக்காக தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

தெலங்காணாவில் பதுக்கம்மா பண்டிகை! தமிழிசை வாழ்த்து! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
வர்தாவின் கீதாயி மந்திர் ! https://dhinasari.com/tourism/177643-geetai-mandi.html Fri, 16 Oct 2020 05:03:07 +0000 https://dhinasari.com/?p=177643

கீதாயி மந்திர்- எளிமையின் அடையாளமாக, புனித இடமாக, அழகான கோயிலாக மக்களுக்கு நல்வழிப்படுத்தும் ஒரு சின்னமாக விளங்குகிறது

வர்தாவின் கீதாயி மந்திர் ! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

geethayi-mandir
geethayi-mandir கீதாயி மந்திரின் நுழைவுவாயில்.

கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

“கீதாயி- என் அன்னை. நான் விழும் போதும், அழும் போதும் என்னை அவள் கவனித்துக் கொள்வாள்,” என்ற விநாயக் நரஹரி பாவே என்னும் ஆசார்ய வினோபா பாவே அவர்களின் வாசகங்களே பார்வையாளர்களை வர்தாவில் உள்ள கீதாயி மந்திரில் வரவேற்கின்றன.

1930-ம் ஆண்டு, தன்னுடைய அன்னை ருக்மிணிதேவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக வினோபா பாவே பகவத் கீதாவை மராட்டியில் கீதாயி ( கீதா+ஆயி =கீதை அன்னை) மொழிப்பெயர்க்க முடிவெடித்தார். இரண்டு ஆண்டுகளில் வினோபா பாவே தன்னுடைய மொழிப்பெயர்ப்பை முடித்தார். கீதாயி- யின் முதல் பதிப்பை காந்தியின் அபிமானியான ஜம்னாலால் பஜாஜ் 1932-ம் வருடம் வெளியிட்டார்.

geethayi-mandir1
ஷீகாகண்ட் ( கற்களில்) பொறிக்கப்பட்டுள்ள கீதாயின் ஸ்லோகங்கள்

லேட் கமல்நயன் பஜாஜ் தன்னுடைய குருவான வினோபா பாவேவின் கீதாயிக்காக ஒரு நினைவுச்சின்னம் எழுப்ப விழைந்தார். அந்த நினைவுச்சின்னமானது காந்தியடிகள், வினோபா பாவே மற்றும் ஜம்னாலால் பஜாஜ் அவர்களது தத்துவங்களை பறைச்சாற்றும் விதமாக எளிமையான, புனிதமான, அழகானதாக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
புதுதில்லியின் கமல்நயன் பஜாஜ் சாரிடபிள் டிரஸ்ட் கீதாயி மந்திரை நிர்வகிக்கிறது.

விநாயக் புரொஹித் என்பவர் கீதாயி மந்திரின் டிசைனை வடிவமைத்தார். அவர் கமல்நயன் பஜாஜின் விருப்பப்படி, கீதாயி மந்திரின் முன்புறத்தில் இருந்து பார்த்தால் காந்தியின் ராட்டைப் போலவும், பின்புறத்தில் இருந்து பார்த்தால் ஜம்னாலால் பஜாஜுக்கு பிடித்த பசுமாடுவின் உருவத்தைப் போலவும் வடிவமைத்தார்.

geethayi-mandir2
ஷீகாகண்ட் ( கற்களில்) பொறிக்கப்பட்டுள்ள கீதாயின் ஸ்லோகங்கள்

கீதாயி மந்திரின் பூமிபூஜை விழாவானது 1964-ம் வருடம் நவம்பர் 4-ந் தேதி அன்று வினோபா பாவேவினால் செய்யப்பட்டது. எல்லை காந்தியான கான் அப்துல் கபார் கான் அவர்களின் கரத்தால் கீதாயி மந்திரின் அடிக்கல் நாட்டப்பட்டது. பிறகு, கமல்நயன் பஜாஜ் அவர்களின் மறைவினால் கட்டமைப்பு வேலைகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது.

பின்னர், 1977-ம் ஆண்டு மீண்டும் கீதாயி மந்திரின் வேலைகள் தொடங்கப்பட்டது.

கீதாயின் 18 அத்தியாயங்களின் ஸ்லோகங்கள் 18 வகையான ‘ ஷீலாகண்ட்’ எனப்படும் கற்களில் செதுக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லானது 9 அடி உயரமும், 2 அடி அங்குலமும் உள்ளது. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு ஸ்லோகம் பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களின் அளவுகள் ஒரே மாதிரியாகவும், 8-10 அடி தூரத்தில் நின்று கொண்டு படிப்பதற்கும் ஏதுவாக பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுச்சின்னம் கீதாயி மந்திர் என்றழைக்கப்பட்டாலும், பாரம்பரிய கோவிலின் கட்டடமைப்போ, வழிபடுகிற தெய்வங்களோ, தரையோ, சுவர்களோ, கூரையோ கிடையாது. இயற்கை அன்னையின் மடியில் அமைக்கப்பட்டுள்ள அருமையான இடம்.

geethayi-mandir3
கீதாயி மந்திரின் ஒரு பகுதி.

ஆசார்ய வினோபா பாவே கீதாயி மந்திரை 1980-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஏழாம் நாள் தொடங்கி வைத்தார்.

கீதாயி மந்திர்- எளிமையின் அடையாளமாக, புனித இடமாக, அழகான கோயிலாக மக்களுக்கு நல்வழிப்படுத்தும் ஒரு சின்னமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

வர்தாவின் கீதாயி மந்திர் ! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
திருப்பதி தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டிக்கு கொரோனா; உடன் இருந்தவர்கள் டென்ஷன்! https://dhinasari.com/latest-news/177563-yv-subba-reddy-tested-covid-positive.html Thu, 15 Oct 2020 13:15:15 +0000 https://dhinasari.com/?p=177563

திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டிக்கு கொரோனா தொற்று. அங்குள்ளவர்களுக்கு டென்ஷன்… டென்ஷன்…!

திருப்பதி தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டிக்கு கொரோனா; உடன் இருந்தவர்கள் டென்ஷன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

subba-reddy
subba-reddy

திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டிக்கு கொரோனா தொற்று. அங்குள்ளவர்களுக்கு டென்ஷன்… டென்ஷன்…!

திதிதே சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் கொரோனா நோய் மிக அதிகமாக பரவி வரும் வேளையில் சாமானியனிலிருந்து பிரமுகர்கள் வரை இந்த வைரஸ் நோயால் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.

அண்மையில் நடந்த திதிதே கூட்டத்தில் ஒய்வி சுப்பாரெட்டி பங்கு கொண்டார். அதனால் அவரை சந்தித்தவர்களிடம் கவலை பெருகி உள்ளது.

இந்த மாதம் 12ஆம் தேதி ஒய்வி சுப்பாரெட்டியின் தாயார் பிறந்த நாள் நடந்தது. அந்த விழா கொண்டாட்டங்களில் கூட அவர் பங்கு கொண்டு தாயின் ஆசீர்வாதத்தை பெற்றார். ஒய்வி சுப்பாரெட்டிக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என தீர்மானிக்கப்பட்டதால் அவருடைய தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேஷ் அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பல்லி ஶ்ரீனிவாஸ் கொரோனாவால் தாக்கப்பட்ட விஷயம் தெரிந்ததே. அவருக்கு இன்னும் நோய் குறையவில்லை. அதனால் அவருக்கு மேலான சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்சேர்த்துள்ளார்கள். செப்டம்பர் 28ம் தேதி வெல்லம்பல்லி ஸ்ரீநிவாசுக்கு கொரோனா பாசிடிவ் வந்ததாக முடிவாகியது.

அப்போதிலிருந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் 14 நாட்கள் கடந்தாலும் அவருக்கு இன்னும் நோய் குறையவில்லை. அதனால் புதன்கிழமையன்று மேலான சிகிச்சைக்காக ஹைதராபாதுக்கு அனுப்பினார்கள். அவர் கொரோனாவிலிருந்து இன்னும் குணம் அடையாததால் கட்சித் தலைவர்களும் குடும்ப அங்கத்தினர்களும் கவலை அடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேஷில் கோவிட் 19 பாதிப்புக்கு உள்ளானவர்கள் சென்ற மாதங்களோடு ஒப்பிட்டால் குறைந்ததாகவே தெரிகிறது.

அண்மையில் ஏபியில் 3592 கோவிட் கேசுகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள ஹெல்த் புலெடின் அறிவித்துள்ளது. இதனால் ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767465 க்கு சேர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 32 பேர் இறந்து போய் உள்ளார்கள். இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6319ஐ எட்டியுள்ளது.

நேற்று வெளியிட்ட ஹெல்த் புலெடின் விவரங்களின்படி… மாநிலத்தில் மிக அதிகமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 607கேசுகள் பதிவாகி உள்ளன. அதன்பின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 518, அடுத்ததாக சித்தூர், கடப்பா மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

திருப்பதி தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டிக்கு கொரோனா; உடன் இருந்தவர்கள் டென்ஷன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
ஐப்பசி மாத பூஜைக்காக… சபரிமலை நடை நாளை திறப்பு! https://dhinasari.com/latest-news/177532-sabarimala-will-opens-tomorrow.html Thu, 15 Oct 2020 06:14:38 +0000 https://dhinasari.com/?p=177532

முக்கிய சாலைகள் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு இதர சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஐப்பசி மாத பூஜைக்காக… சபரிமலை நடை நாளை திறப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

sabarimali iyappan kovil 1
sabarimali iyappan kovil 1

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப் படுகிறது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.

துலாம் மாதத்தின் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நாளை மாலையில் தொடங்கி நடைபெற உள்ளன. தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது. சபரிமலைக்கு செல்லும் முக்கிய சாலைகள் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு இதர சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஐப்பசி மாத பூஜைக்காக… சபரிமலை நடை நாளை திறப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>
விசாகப்பட்டினம் ருஷிகொண்டா கடற்கரைக்கு அரிய கௌரவம்! https://dhinasari.com/latest-news/177513-vizag-beach-got-fee-certificate.html Thu, 15 Oct 2020 05:43:20 +0000 https://dhinasari.com/?p=177513

விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா பீச்சுக்கு அரிதான பெருமை கிடைத்துள்ளது.

விசாகப்பட்டினம் ருஷிகொண்டா கடற்கரைக்கு அரிய கௌரவம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>

vizag-beach
vizag-beach

விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா பீச்சுக்கு அரிதான பெருமை கிடைத்துள்ளது.

உலக அளவில் உள்ள ப்ளூ ஃப்ளாக் பீச்களின் வரிசையில் விசாகா ருஷிகொண்டா பீச் கூட அண்மையில் இணைந்துள்ளது.

ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன் கிடைத்தது குறித்து மாநில சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் முத்தம்செட்டி சீனிவாசராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த ‘நீலக் கொடி’ சர்டிபிகேஷன் கிடைப்பதற்கு உதவி புரிந்த ஒவ்வொருவருக்கும் நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உற்சாகத்தில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் பல கடற்கரைகளுக்கு ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன் வருவதற்கு முயற்சி செய்வோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஏழு கடற்கரைகளுக்கு இதுவரை ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன் உள்ளது. தற்போது விசாகா ருஷிகொண்ட பீச் எட்டாவது பீச்சாக நின்றுள்ளது.

உலகிலுள்ள 50 ப்ளூ ஃப்ளாக் பீச்சுகளில் பொல்யூஷன் கண்ட்ரோல் பிராக்டிசில் கூட விசாகப்பட்டினம் கடற்கரை மூன்றாவது இடத்தை சாதித்ததற்கு பாராட்டுகள் என்று அவர் தெரிவித்தார்.

இதன்படி ‘ப்ளூ ஃப்ளாக் பீச்சஸ் இண்டியா மிஷின் லீடர்’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அழகு, சுத்தம், தூய்மை, ஆனந்தம் இவற்றுக்கான சர்வதேச அடையாளம் இந்த FEE சர்டிஃபிகேட் (Foundation of Environmental Education).

இந்த சான்றிதழ் நான்கு தகுதிகளைக் கொண்டு வழங்கப் படுகிறது. நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு இவற்றின் அடிப்படையில் சாதிப்பது. இந்த செய்திகளை ஆந்திரா டூரிசம் முதன்மை செயலர் திரு ரஜத் பார்கவா தெரிவித்தார்.

இந்தியாவில் இந்த சான்றிதழ் சாதித்துள்ள மீதி ஏழு கடற்கரைகள் வருமாறு: சிவ்ராஜ்பூர் – குஜராத், கோக்லா – டையூ, காசர்காடு- கர்நாடகா, படுபிட்ரி – கர்நாடகா, கப்பாட் – கேரளா, கோல்டன் – ஒடிசா, ராதாநகர் – அந்தமான். இந்த Eco லேபிள் சான்றிதழ் அளிப்பது 1985ல் பிரான்சில் தொடங்கப்பட்டது.

விசாகப்பட்டினம் ருஷிகொண்டா கடற்கரையை தினமும் 20,000 பேர் நடைப்பயிற்சி, நீச்சல், பிக்னிக், மீன்பிடித்தல், கயாக்கிங் என்னும் படகுசவாரி, மற்றும் கைவினைப் பொருள் செய்தல் போன்றவற்றுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆந்திராவுக்குக் கிடைத்த இந்த அரிதான மதிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் கடற்கரைகளை தூய்மை யாக வைத்துக்கொள்ள இதுபோன்ற விருதுகள் ஊக்குவிக்கும் என்பது உண்மை.

விசாகப்பட்டினம் ருஷிகொண்டா கடற்கரைக்கு அரிய கௌரவம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

]]>