By — ஆர். வி. ஆர்
தமிள் நாட்ல உயர்கல்வித் துறைக்குனு ஒரு அமைச்சர் வச்சிக்கிறாங்க. துறை பேரைக் கேட்ட உடனே நீ என்ன நென்ச? ஏதோ கெவுரவமான ஆளு, பண்பான ஆளு, அப்பிடித்தான் யாரையாவது பாத்து அமைச்சரா போட்ருப்பாங்க, அப்பிடின்னு நெனச்சியா? தப்பு. நம்ம பொன்முடி இல்ல, பொன்முடி, அவரத்தான் புடிச்சு உயர்கல்வித் துறை அமைச்சர்னு உக்கார வச்சிக்கிறாங்க. அவருதாம்பா, எப்பவும் ஜாலியா பேசிக்கினு இருப்பாரே, அந்த பொன்முடிதான்.
தமிள்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அப்பிடின்னு ஒரு சங்கம் கீது. சென்னைல அவுங்க விளா ஏதோ எடுத்து அமைச்சர் பொன்முடிய மேடைல பேசக் கூப்டுக்கினாங்க. விளா மேடைல கெத்தா ஏறுன பொன்முடி, முன்னால இருந்த வாத்யாருங்களப் பாத்து இப்பிடிப் பேசிக்கிறாரு.
“கல்வி வளர்ணும். கல்வி வளர்ரதுக்கு நீங்க வாத்யாருங்கதான் கார்ணம். ஒரு காலம் இருந்திச்சு. அப்பல்லாம் வாத்யார்ங்க பிரம்பை எட்துனு அடிப்பாங்க. இப்ப வாத்யாரை பிரம்பை எட்துனு அடிக்கிற மாதிரி இருக்கு (அங்க இங்க திரும்பி சிர்ச்சிகினே, சிரிப்பை அடக்க முடியாம இத சொன்னாரு பொன்முடி). மாணவங்க மாறிப் பூட்டாங்க. இது காலத்தோட மாற்றம். இதெல்லாம் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கினுதான் பாடம் சொல்லிக் குடுக்கணும். அந்த அளவுக்கு நீங்க வாத்யாருங்க டாப்பா வளர்ச்சி அடையணும்”
பொன்முடி என்னா சொல்றாரு பாத்தியா? மொதல்ல “கல்வி வளர்ணும்”னு ஸ்டார்ட் பண்ணாரு. எப்பிடி வளரும்? பொன்முடி மாதிரி ஒரு ஆளு கல்வி அமைச்சர்னு நாக்காலில குந்திக்கினா, கல்வி புட்டுக்குமா இல்லியா, சொல்லு.
தாய்மாருங்க கிட்ட “நீங்க ஓஸி பஸ்லதான போவுறீங்க?”ன்னு எளக்காரமா கேட்டவரு பொன்முடி. மந்திரியாச்சேன்னு இவருகிட்ட கொறை சொன்ன சாதாரண மன்சன்ட்ட, “ஆமா, நீ எனக்கு ஓட்டுப் போட்டு கிளிச்சிட்ட”ன்னு வந்தவன் மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசிக்கிறாரு. நெறைய பேர் வர்சையா வந்து இவருகிட்ட ரூபா நோட்டு வாங்கிக்கினு கும்பிடு போட்டு இவரு காலத் தொட்டுப் போற வீடியோவும் வந்திருக்கு.
உனக்கு லீடர் சரி இல்ல, ஆளு தொத்தல்னு வையி, அது முளு குரூப்பையும் சொரத்து இல்லாம ஆக்கிரும். அவரு தலமைல வளர்ச்சி வராது. வீள்ச்சிதான் இருக்கும். “கல்வி வளர்ணும்”னு பொன்முடியே பேசுறது டமாஸா இல்ல?
மேல என்ன சொல்லிக்கினாரு பொன்முடி? “கல்வி வளர்ரதுக்கு நீங்க வாத்யாருங்கதான் கார்ணம்” அப்டின்றாரு. ஆனா உண்மை கொஞ்சம் வேற. இதுக்கு ரண்டு பக்கம் இருக்கு. மொதல்ல, கல்வி கத்துக்க போறவன் வாத்யார மதிக்கணும். இன்னொரு பக்கத்துல, வாத்யார் கிட்டயும் அதுக்கான பண்பு இருக்கணும், அவரும் பாடத்துல கெட்டியா இருக்கணும். அந்த மாதிரி ஆளு எத்தினி பேரு இன்னிக்கி ஸ்கூல் வாத்யார் வேலைக்கு கெடிப்பான்? கொஞ்சப் பேர்தான் வருவான். ஏன்னா திராவிட ஆட்சி ரிபீட்டா குடுக்கற சிக்னல் அப்பிடி.
மாணவங்களயும் பாரு. அவுங்களப் பத்தி ஜனங்க என்ன நெனப்பாங்க? பஸ்ஸுக்கு டாப்புல, சைடுல, பின்னாடி அவுங்க ஏறி கூவிக்கினே போற எத்தினி போட்டோ வீடியோன்னு பாத்திருக்கோம்? சட்டக் கல்லூரி வாசல்ல மாணவன் எப்பிடி ஒத்தனை ஒத்தன் கட்டையால அடிச்சிக்கினான் – போலீசும் அப்ப வேடிக்கை பாத்திச்சே? திராவிட அரசியல்வாதிங்க தலை எடுத்து ஆட்சிக்கு வந்தா, மொத்த சமூகமும் ஒவ்வொரு வகைல வீள்ந்து போகும். அதான் மேட்டரு.
கிளைமாக்ஸா பொன்முடி பேசினாரு பாரு – அதவிட வாத்யாருங்களுக்கு ஒரு கேவலம் எங்கியும் கெடிக்காது. அவரு உளறலுக்கு வெலாவாரியான அர்த்தம் இதானபா?
“காலம் மாறிப் போச்சு, அதுனால படிக்கிற பசங்க பெரம்பை எட்துனு வாத்யார போட்டாலும் அதப் பத்திக் கவலைப் படாம வாத்யார் பாடம் நடத்தணும். ‘பசங்க அடிக்கிறாங்க’ அப்பிடின்னு எங்கிட்ட வந்து அளுவக் கூடாது. அடி வாங்கிக்கினே, சிரிச்சிக்கினே, வாத்யாருங்க அல்லாரும் பெர்சா வளர்ணும். முன்ன காலத்துல போர் வீரர்ங்க எப்பிடி விளுப் புண்ணை காமிச்சு பெருமையா பேசிக்கினாங்களோ, அது மாதிரி இந்தக் காலத்துல வாத்யாருங்க பெரம்படி வாங்கி வாங்கி மூஞ்சிலயும் முதுகுலயும் வலி, வீக்கம்னு பெருமையா காட்டிக்கணும். வாத்யாருங்களுக்கு பெர்சு பெர்சா வீக்கம் இருந்திச்சினா, அவுங்க நல்லா வளர்ராங்க, தமிள் நாட்ல கல்வியும் சூப்பரா வளருதுன்னு ஆவும்.”
இன்னொண்ணு முக்கியமா கவனி. இந்த தமிள்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் இருக்குதே, அது பேஸ்புக்குலயும் இருக்குது. ஒரு தபா அத கம்பூட்டர்ல பாரு. கலைஞர் கருணாநிதி போட்டோவ பெருசா போட்டு, “தகுதிக்கும் திறமைக்கும் தரப்பட்ட வாய்ப்புகளால் கிழித்தது என்ன, தைத்தது என்ன? கிழித்து தைத்ததுதான் என்ன, என்ன, என்ன?” அப்பிடின்னு கலைஞரு பேசினத பெருமையா போட்டுக் காட்றாங்க பேஸ் புக்குல. இதுக்கு என்னபா அர்த்தம்? “வாத்யார் வேலைக்கு வர பெர்சா தகுதி, தெறமைலாம் உனக்கு வாணாம். அப்பிடில்லாம் நீ ஒண்ணும் கிளிச்சுத் தைக்க தேவையில்ல. வா வாத்யாரே! எப்பிடியாவது பூந்து வேலையப் புடி!” அப்பிடின்னு இந்த சங்கமே மொத்த ஊருக்கும் சேதி சொல்ற மாதிரி இருக்குதே! இது மட்டும் இல்ல. வர்சையா ஸ்டாலின், உதயநிதி, பொன்முடி, அன்பில் மகேசு, தமிளச்சி தங்கபாண்டியன்னு திமுக தலைவருங்க போட்டோவா பேஸ்புக்குல போட்டு கட்சிய கூல் பண்ணி குசிப் படுத்திக்கிது இந்த ஆசிரியர் சங்கம்.
எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லாம தான ஒரு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் இருக்கணும்? ‘இப்பிடில்லாம் அரசியல்வாதிக்கு வெக்கமில்லாம ஐஸ் வச்சு ஜால்ரா போட்டாத்தான் வளர முடியும், அரசாங்கத்துல சலுகை வாங்கிக்க முடியும். இதை நாங்க பண்ணாட்டி இன்னொரு சங்கம் பெரிய ஐஸா வச்சு சத்தமா ஜால்ரா போட்டு கட்சி கிட்ட பேர் வாங்கி வளந்துரும்’னு வாத்யாரும் நெனக்கிற காலம் இது. அவுங்களே அவுங்களுக்கு குட்துகிற பிரம்படி இதுன்றேன்.
ஆனா பாரு, பொன்முடி பேசும்போது ஒரு உண்மைய சூசகமா சொல்லிக்கிறாரு. அந்த அடிப்படைலதான், “மாணவன் தர்ற பெரம்படிய சந்தோசமா வாங்கிக்கோ”ன்னு அவரு வாத்யாருங்க கிட்ட சிபாரிசு பண்ணாரு. அவரு சொன்ன உண்மை இதான்: “காலம் மாறிப் போச்சு”.
காலம் மாறித்தான் போச்சு. அது மாறுனது எப்பன்ற? 1967-ல. அந்த வருசம்தான் திமுக மொதல்ல தேர்தல்ல கெலிச்சு தமிள் நாட்டுல ஆட்சிக்கு வந்திச்சு. அதுக்கு அப்பறம் மாத்தி மாத்தி தமிள் நாட்டுல திராவிட ஆட்சிதான். காலம் மோசமா போய்க்கினே தான இருக்கும்?
Author: Advocate R. Veera Raghavan