2001 கருணாநிதியை கைது செய்து செண்ட்ரல் ஜெயிலில் அடைக்கிறார்கள். அட அதாங்க “ஐயோ கொல்றாங்களே” எபிசோடுல தான்.
திமைகவினரை விடுங்க அதிமைகவினருக்கே அதிர்ச்சி. சிறைச்சாலையின் வெளி வளாகத்தில் புகுந்த மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர் பாலு, ஆகியோர் சிறைச்சாலை காவலர்களை அதட்டிக் கொண்டிருக்கிறார்கள், கதவைத் திறய்யா எங்க தலைவரை நாங்கள் பார்க்கணும்…
முரசொலி மாறன் செம்ம கொதிநிலையில் இருக்கிறார்… நான் ஒரு மத்திய காபினெட் அமைச்சர். நான் சொல்றேன். (அன்றைக்கெல்லாம் மத்திய அமைச்சர் தான். ஒன்றிய அமைச்சர் இல்லை). மரியாதையா கதவைத் திற…
சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு தமிழக மக்கள் அனைவரும் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்ப நம்ம டி.ராஜேந்தர் உள்ளே வந்தார். விட்டார் பாருங்க ஒரு சவுண்டு…
“யோவ் நான் இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ நான் சொல்றேன் நீ கதவத் திற…”
அத்தனை சீரியசான நேரத்தில் நாங்களெல்லாம் வாய் விட்டுச் சிரிச்சுட்டோம். மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் சொல்றதையே காதில் வாங்காம நிற்கும் சிறை காவலர்களிடம் போய் நான் “முன்னாள்” எம்.எல்.ஏ என்று சவுண்டு விட்டது தான் அத்தனை சிரிப்புக்குக் காரணம்.
அதே மாதிரி இப்ப ஒரு காமெடி….
தலைமைச் செயலகம் மற்றும் ஒரு சிட்டிங் மினிஸ்டர் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரனை நடத்திட்டிருக்கும் போது. அது சரியா நடக்குதான்னு மேற்பார்வையிட ஒரு கவுன்ஸிலராகக் கூட இல்லாத ஆர்.எஸ் பாரதி போய் கதவிடுக்கில் எட்டிப் பார்த்துட்டு இருக்கார்.
அதை ஒரு செய்தினு இந்த ஆர்.எஸ்.பாரதி மீடியாக்கள் வெட்கமில்லாமல் ஒளிபரப்பிட்டு இருக்கானுக.
இந்த கூறுகெட்டவனுகளை நினைச்சு… நவதுவாரத்திலும் சிரிச்சுட்டு இருக்கேன்.
- ஆனந்தன் அமிர்தன்