நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பச்சிளம் குழந்தையை ராஜஸ்தானுக்கு ஒரு கும்பல் கடத்த இருந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அரசு மருத்துவமனையில், உடல் நலக்குறைவு காரணமாக பச்சிளம் குழந்தையை கிறிஸ்டி என்ற பெண் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அவ்வாறு சேர்த்த போது, தாம் குழந்தையின் தாய் என்று கூறியுள்ளார்.
ஆனால், கிறிஸ்டியின் வயதையும், உருவத்தையும் பார்த்து, குழந்தையின் தாயாக இவர் இருக்க முடியாது என்ற சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவர்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீஸாரும் இது தொடர்பில் விசாரணை மேற்ஒ
தொடர்ந்து கிறிஸ்டியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டது. அப்போது வேறு சில தகவல்கள் தெரியவந்தன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தை ருக்குமணியாபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் குழந்தை என்றும், அந்தச் சிறுமி கணவரால் கைவிடப் பட்ட நிலையில், குழந்தை பெற்றதும் தெரியவந்தது. மேலும், புளியங்குடியில் உள்ள சூர்யா என்ற தனியார் மருத்துவமனையில் அந்தக் குழந்தை பிறந்துள்ளதும், அது உடனே விலைக்கு விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
மேலும், புளியங்குடியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரிடம் ஓட்டுநராக வேலை செய்துவரும் இம்மானுவல் என்பவர், கிறிஸ்டியின் சகோதரி கணவர் என்பதும், அவர் மூலமே இந்தக் குழந்தை விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இந்த விவரங்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸாருக்கு, தொடர்ந்து குழந்தையை கிறிஸ்டியும், ராஜஸ்தானை சேர்ந்த அவரது கணவரான பாதிரியார் வல்ராமும் ராஜஸ்தானுக்கு கடத்திச் செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கிறிஸ்டி, அவரது கணவரான பாதிரியார் வல்ராம், இம்மானுவல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.