spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?எம்.டி.எச் சாம்பார் பொடியில் நச்சு ரசாயனம்; பாக்கெட்களை திரும்பப் பெற்றது நிறுவனம்!

எம்.டி.எச் சாம்பார் பொடியில் நச்சு ரசாயனம்; பாக்கெட்களை திரும்பப் பெற்றது நிறுவனம்!

- Advertisement -

அமெரிக்காவில் விற்கப்படும் எம்டிஎச் நிறுவன சாம்பார் பொடியில் நச்சு ரசாயனம் அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகம் கலந்திருப்பதாக வெளியான செய்தியை அடுத்து, அந்தப் பாக்கெட்களை திரும்ப பெற்றுக் கொள்ள அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

அமெரிக்காவில் எம்டிஎச் நிறுவனத்தின் சாம்பார்பொடி பிரபலமாக விற்கப் பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் “ஆர்-பியூர் அக்ரோ ஸ்பெஷாலிடீஸ்” என்ற நிறுவனம் இந்த சாம்பார் பொடியைத் தயாரித்து விற்பனை செய்கிறது.

அமெரிக்காவின் உள்நாட்டு வர்த்தகர்கள் உடன் இணைந்து வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள கடைகளில் சாம்பார் பொடி விற்கப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளிலும் இந்த நிறுவனமானது சாம்பார் பொடியை விற்று வருகிறது.

கடந்த வாரம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த சாம்பார் பொடியை அந்நாட்டு உணவு மற்றும் மருந்து முறைப்படுத்தும் குழு பரிசோதனை செய்தது. அப்போது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சால்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா சாம்பார் பொடியில் இருந்ததை அந்தக் குழு உறுதி செய்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைத்து வயிற்றுவலி, தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களுக்குக் காரணமாக அமையும் என்று கூறப் படுகிறது.

தகவல் அறிந்ததும், கடந்த வாரத்தில் 3 தடவையாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த அனைத்து சாம்பார் பொடி வகைகளையும் அந்த நிறுவனம் திரும்ப பெற்றுக் கொண்டது. செய்தி அறிந்து நிறுவனம் தானாக முன்வந்து திரும்பப் பெற்றுக் கொண்டதா, இல்லை வற்புறுத்தல் காரணமா என்று கூறப் படவில்லை.

2018-2019-ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த சாம்பார்பொடி பாக்கெட்களில் 20 முறை இந்த பாக்டீரியா இருப்பதை முறைப்படுத்தும் குழுவானது கண்டறிந்துள்ளது. இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary : House of Spices (India) is recalling different lots of “MDH SAMBAR MASALA”, 3.5oz (100g) UPC code 6291103750327. This product is produced by R-PURE AGRO SPECIALITIES and distributed by HOUSE OF SPICES (INDIA). This product was tested by FDA through a certified laboratory to be positive for Salmonella.

https://www.fda.gov/safety/recalls-market-withdrawals-safety-alerts/house-spices-india-issues-recall-mdh-sambar-masala-due-salmonella-contamination

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe