திராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி!

திராவிடம் என்பதே போலியானது என்று அடித்துக் கூறுகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

krishnasamy

திராவிடம் என்பதே போலியானது என்று அடித்துக் கூறுகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

பகுத்தறிவு வாதம் பேசி, திராவிடர் கழகத்தை தோற்றுவித்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த தினமான இன்று, திராவிட இயக்கங்கள், திராவிட கட்சிகள் அவரது சிலைக்கு, உருவப் படத்துக்கு என மாலை அணிவித்து கொண்டாடினர். திராவிட இயக்கங்கள் எனும் பெயரில் தமிழகத்தை நாசமாக்கிய விஷக்கிருமிகளின் முதல் பரவலை அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் தெளிவாகக் கூறியிருந்தார். விஷக் கிருமிகள் பரவத் தொடங்கி விட்டன என்று.

அதன்படி, தமிழகத்தில் பண்டைய அற நெறிகள் காணாமல் போயுள்ளன. டாஸ்மாக் தமிழன் தள்ளாடுகிறான். எந்நேரமும் போதையில் மிதந்து கொண்டிருக்கும் தமிழனால் அறிவைப் பயன்படுத்தி சிந்திக்க இயலவில்லை. இந்நிலையில், சாதி வெறியைப் புகுத்தி, திராவிடம் எனும் பெயரில் போலி இனவாதத்தைக் கட்டவிழ்த்து, ஒரு குடும்பம் மட்டுமே கோடீஸ்வரக் குடும்பமாக ஆனதை தமிழகத்தில் அறிவுடன் கொஞ்சம் யோசிப்பவர்கள் அவ்வப்போது எடுத்துச் சொல்லி வருகின்றனர் .

இந்த நிலையில், இன்று வெளியான ஒரு வீடியோ பதிவில், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதனைக் கேள்வியாக எழுப்பியுள்ளார். இதனைத் தம் டிவிட்டர் பதிவிலும் வெளியிட்டிருக்கிறார். அதில்…

திராவிடம் என்பதே போலியானது. பிராமணர்கள் எல்லோரும் ஆரியர்களா? ஆரியர்கள் எல்லோரும் பிராமணர்களா? Caldwell எழுதியதை தவிர ஆரியம் -திராவிடம் என்று பிறிக்க மறுக்கமுடியாது ஆதாரங்கள் எங்கும் கிடையாது.

Advertisements