![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2019/10/silk.jpg?ssl=1)
அச்சு அசலாக நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சொக்க வைக்கும் கண்கள்.. செக்கச் சிவந்த இதழ்கள்.. கிறங்கடிக்கும் கவர்ச்சி.. சில்க் ஸ்மிதா… இந்த பேரைக் கேட்டாலே சொக்கி போவோர் ஏராளம். அந்த காந்த கண்களின் வசீகரம் இன்றும் பல சமூக வலைதளங்களின் வழியாக நம்மை இழுத்துக் கொண்டே தான் இருக்கிறது.
80கள் தொடங்கி 90களின் அரை இறுதி வரை தமிழ் சினிமாவை தன் பின்னால் ஓடவிட்ட கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா. 17 ஆண்டு கால சினிமா வாழ்வில், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 450 படங்களுக்கு மேல் நடித்தவர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார். சில்க் இறந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னமும் அவருடைய மார்க்கெட் குறையவே இல்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக எடுத்தார்கள். பா.ரஞ்சித் அதை வெப் சீரிசாக எடுக்கிறார்.
மும்தாஜ் முதல் முமைத்கான் வரை எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் தமிழில் வந்துவிட்டாலும், சில்க் ஸ்மிதாவின் இடத்தை பிடிக்க முடியவில்லை.
சில்க் ஸ்மிதாவே மீண்டும் பிறந்து வந்துவிட்டார் போல டிக்டாக்கில் ஒரு பொண்ணு அப்படியே அச்சு அசலாக சில்க் மாதிரியே இருக்கிறார். அதுவும் அந்த பொண்ணு போடும் வீடியோக்கள் எல்லாம் சில்க்கின் பாடல்களை வைத்து தான்.
சிலுக்கு ???????? pic.twitter.com/cIaGRpikWV
— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 10, 2019