
புதிய 1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் வர உள்ளதாக கூறி சில படங்கள் சமூக தளங்களில் உலா வருகிறது.
புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது என்று தெரிவித்து வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வடிவங்கள் அதன் புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவும் 1000 ரூபாய் நோட்டு புகைப்படங்கள் போலியானவை. அந்த நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்திடும் இடத்தில் மகாத்மா காந்தியின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது. மேலும் இது ஒரு கற்பனை வடிவம் என்று ரூபாய் நோட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இதை யாரும் உண்மை என்று நம்பி அதை பகிர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுபோன்று போலியான ரூபாய் நோட்டுகளை, ரூபாய் நோட்டு வடிவங்களை மக்கள் மத்தியில் அதிகம் பரப்பி இதேபோன்று கள்ள நோட்டுகளை அச்சடித்து வெளியில் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அதையும் நம்பி மக்கள் பெற்றுக் கொண்டாலும் அதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை தான்! எனவே பொதுமக்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சமூகத் தளங்களில் சிலர் எச்சரிக்கை செய்தும் வருகின்றனர்.