“அண்ணா அன்றே சொன்னார் ஆட்டுக்குத் தாடி மாட்டுக்கு கவர்னர் என்று ” என தேர்தல் கூட்டத்தில் காமெடியாகப் பேசி, மக்களின் ஒட்டுமொத்த கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் கருணாநிதி மகன் ஸ்டாலின்!
வாய்புளிச்சதோ மாங்கா புளிச்சதோ என்று எதையும் பேசிடமாட்டேன்… நான் எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவேன்… என்று சொல்லிச் சொல்லி, துண்டுச்சீட்டில் எழுதி வைத்துள்ளதைப் பார்த்துப் பேசும் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது உளறுவதும் வழக்கம்தான்!
ஒவ்வொரு நாளும் அவரது உளறல் பேச்சுக்கள் வீடியோக்களாக சமூகத் தளங்களில் பகிரப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் மணிக்கு ஒரு தரம் அப்டேட் ஆக வந்துகொண்டிருப்பதுதான் ஆச்சரியமான உண்மை.
சற்று முன்… ஸ்டாலினின் லேட்டஸ்ட் வீடியோ என்று பலரும் எடுத்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று வெளியான மூன்று வீடியோக்களில் ஒன்றில், ஆட்டுக்குத் தாடி, மாட்டுக்கு கவர்னர் என்று சொல்லி உளறுகிறார். அடுத்து, ஒரு வீடியோவில் பகுத்தறிவுப் புயலான ஸ்டாலின், வாக்காளர்களிடம் சத்தியமா தீமூக்காவுக்கு ஓட்டுப் போடுவீங்களா என்று கேட்கிறார்.
இன்னொரு வீடியோவில் குட்கா யூஸ் பண்ணினால் என்ன வரும்? குட்கா வரும் தடுக்கவே முடியாது என்கிறார்… இவற்றை சமூகத் தளங்களில் பகிர்ந்து நகைச்சுவையுடன் இன்றைய பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்!