
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலங்கள் குறித்து ஒரு டிவிட்டர் பதிவினை செய்திருந்தார். சினிமாத் தனமாக ஒரு பதிவு போட, அது அரசியல் தனமாக இப்போது அவரை பூமராங்காக தாக்கியிருக்கிறது.
படம் பார்த்துப் படித்த பாடத்தை தன் வாழ்நாளில் ஸ்டாலின் கடைப்பிடித்து, முரசொலிக்காக ஆதிதிராவிடர்களிடம் இருந்து பறித்துக் கொண்ட பஞ்சமி நிலங்களை திருப்பிக் கொடுத்துவிடுவார் என்று நம்புவதாக பாமக., நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், அந்த இடத்தின் பட்டாவை ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். மேலும், அது தனியார் ஒருவரிடம் இருந்து பெற்ற நிலம் என்றும் கூறியிருந்தார். இதற்கு கடும் விமர்சனம் எழுந்தது.
சமூகத் தளங்களில் பலரும் அந்த இடத்தின் உண்மைத் தன்மை குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அதே நேரம், பட்டாவைப் பதிவிட்டு, மேலும் சிக்கலை ஸ்டாலின் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கருத்துப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஸ்டாலினுக்கு மேலும் தனது கேள்விகளை முன்வைக்கும் வகையில், ராமதாஸ் இன்று டிவிட்டரில் சில கருத்துகளைப் பதிவு செய்தார். முரசொலி நிலம் குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் டுவிட்டர் பதிவுகளில் நச் என்று நாலு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஸ்டாலின் என்ன பதிலளிக்கிறார் என்பதைப் பொறுத்து இந்த விவகாரம் நீள்வதும் நீட்டிக்கப்படாமல் போவதும் உள்ளது.
ராமதாஸின் டிவிட்டர் பதிவுகளில் கேட்கப் பட்டிருப்பவை….
1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
2. முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
3. முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?
4. நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!
- பஞ்சாங்கம் மார்ச் 28 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
- இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!
- “நீங்கள் ஒரு மோசடிப் பேர்வழி”: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
- புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!
- சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
- பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!