அத நைஸா திருடி… இங்க கூடவா ஒளிச்சி வெப்பாங்க..?!

சைனா மார்க்கெட் கடைகளுக்குச் சென்று அதில் உள்ள பொருட்களை திருடி பின்னர் எதுவும் அறியாதது போல் மெதுவாக அங்கிருந்து நழுவினர் .

stealing thins

திருடிகள் உள்ளார்கள்… ஜாக்கிரதை! எங்கெங்கெல்லாம் ஒளித்து வைக்கிறார்கள் பாருங்கள்… என்று ஆந்திராவில் வைரலாகும் ஒரு வீடியோ பதிவினை பகிர்ந்து கொண்டு கருத்து இடுகிறார்கள்.

நல்கொண்டா மாவட்டம் மிரியால்குடா கணேஷ் நகரில் திருடிகள் சிலர், திடீர் பரபரப்பை ஏற்படுத்தினர். சைனா மார்க்கெட் கடைகளுக்குச் சென்று அதில் உள்ள பொருட்களை திருடி பின்னர் எதுவும் அறியாதது போல் மெதுவாக அங்கிருந்து நழுவினர் .

ஆனால் அவர்கள் சென்றபின்னர் தான் கடைக்காரர் பொருட்கள் குறைவதை கவனித்துள்ளார். அது குறித்து சந்தேகம் ஏற்பட்டு சிசிடிவி காட்சிகளை அவர் மெதுவாகப் பரிசோதித்துள்ளார்.

அப்போதுதான், கடைக்கு வந்த பெண்கள் சிலர் பொருட்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் தென்பட்டன. அதிலும், மூன்று பேர் நின்று கொண்டிருக்க, ஒரு பெண்மணி லாகவமாக புடைவைக்குள் பொருள்களை வைப்பதைப் பார்த்து கடைக்காரர் அசந்து போனார். அட… எங்கெங்கெல்லாம் ஒளித்து வைக்கிறார்களோ பாருங்க என்று வியந்த கடைக்காரர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் இப்போது ஆந்திரத்தில் வைரலாகிவருகிறது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :