
இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் முதலமைச்சரின் தலையில் மக்கள் வைரக் கிரீடம் சூட்டியுள்ளனர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில், ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் தொகையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். ஆவின் நிறுவனத்தின் புதிய வகை பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக 3 பொலீரோ வாகனங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வைரக் கிரீடத்தையே சூட்டியிருக்கிறார்கள் என்றார்.
மேலும், சீன அதிபர் தமிழகத்தில் காரில் பயணித்த அளவுக்கு சீனாவிலேயே காரில் பயணித்ததில்லை என்றார்.