
ஹிந்து கடவுள்களின் படங்களை எரித்த மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த எஸ்.குருபட்டியில் ஐந்து ஆண்டுகளாக பெந்தகோஸ்தே சபையை நடத்தி வருகிறார் மதபோதகர் ஜான் பிரிட்டோ. 53 வயதான இவர், மதுரை மாவட்டம் ஜெயந்திபுரத்தைச் சேர்ந்தவர்.
எஸ்.குருபட்டியில் பெந்தகோஸ்தே சபையை நடத்தி வரும் மதபோதகரான ஜான் பிரிட்டோ, கடந்த 2ஆம் தேதி தமது சபை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் ஹிந்து கடவுள்களின் படங்களை எரித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதைப்பார்த்த எஸ் குருபட்டி பகுதி இந்து முன்னணி செயலர் மாதேஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று புகார் செய்திருந்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், பிற மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, மதபோதகர் ஜான் பிரிட்டோவை நேற்று கைது செய்தனர்.