ஜல்லிக்கட்டு தடயை நீக்கியது சின்னம்மாவாம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது சின்னம்மா சசிகலா .
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டத்தால் நீங்கியது. ஆனால் ஜல்லிக்கட்டு தடை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவால் தான் நீங்கியது என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தால் மத்திய மாநில அரசுகள் வேறு அடிபணிந்தது.
தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை சட்டமாக கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கினர். மாணவர்களின் இந்த போராட்டத்தை உலகமே கண்டு வியந்தது. இந்தியாவுக்கு முன்மாதிரியாக இருந்தது இந்த அறப்போராட்டம்.
பலரும் வெகுவாக பாராட்டினர். அரசியல் கட்சியினரை முற்றிலுமாக புறக்கணித்தனர் போராட்டக்காரர்கள். ஆனால் தற்போது தடை நீங்கிய பின்னர் இந்த தடை சசிகலாவால் தான் நீங்கியது என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில் சின்னம்மாவின் சீறிய முயற்சியால் தான் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் பலரையும் கோபமடைய வைத்துள்ளது.
மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியை தங்களுக்கு கிடைத்ததாக சசிகலா தரப்பு போஸ்டர் ஒட்டியுள்ளதால் அதில் உள்ள ஜெயலலிதா படத்தை விட்டுவிட்டு சசிகலாவின் படைத்தை மட்டும் கிழித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.