இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி வருவதாக சிறிசேன பொய் கூறுகிறார்: திருமாவளவன்

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி வருவதாக சிறிசேனே பொய் கூறுகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த கோரி தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவாகரத்தில் துரோகம் செய்யும் அதிபர் சிறிசேனேவுக்கு மத்திய அரசு உதவக்கூடாது என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.