புதுடில்லி : ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கம் வெல்வதற்காக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் 8 பேர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.
*சிறப்புக்குழு:*
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கம் வெல்வது இதுவரை விரல் விடும் எண்ணிக்கையிலேயே இருந்தது. ஒலிம்பிக்கில் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்கவும், பங்கேற்கும் இந்திய வீரர்களை தயார் படுத்தவும், அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளிக்கவும் எட்டு பேர் கொண்ட சிறப்புக்குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழுவில், கடந்த 2012 ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூட்டில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, பேட்மின்டன் வீராங்கனை சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட 8 பேர் உள்ளனர்.
*3 ஒலிம்பிக் போட்டிகள் :*
அனைத்து விளையாட்டு சங்கங்களை ஒருங்கிணைப்பது, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது மற்றும் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் தங்களது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த இக்குழு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகள்(2020, 2024 மற்றும் 2028) வரை, இப்பொறுப்பில் இருப்பார்கள்.