கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்டத்தை
பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்தக்கோரி  நூற்றுக்கும் மேற்பட்ட
பெண்கள் முற்றுகையிட்டனர்.

தேசிய ஊரக வேலை வாயப்பு உறுதியளிப்பு திட்டத்தில் சட்டமாக்கப்பட்டுள்ள 100
நாட்கள் வேலையை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி வேலை
வழங்கக்கோரி கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட
பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட
பெண்கள் அனைவரும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுக்களை வழங்கி விட்டு
கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால்  அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்