அனைவருக்கும் வீடு: விண்ணப்பிப்பது எப்படி?

அனைவருக்கும் வீடு: ‘பிரதான் மந்திரி அவாஸ்
யோஜனா’ திட்டத்தில் புதிய மாற்றம்? எப்படி
விண்ணப்பிப்பது?
2022-ம் ஆண்டிற்குள் அனைவரும் சொந்த
வீட்டுடன் இருப்பதற்காக 2016-ம் ஆண்டு மேலும்
கடன் தொகையை இரட்டிப்பாக்கை பல சலுகைகளை
அறிவித்துள்ளது.
வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் அனைவரும்
வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில்
அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு
அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டிற்குள்
அனைவரும் சொந்த வீட்டுடன் இருப்பதற்காக 2016-
ம் ஆண்டு மேலும் கடன் தொகையை இரட்டிப்பாக்கை பல
சலுகைகளை அறிவித்துள்ளது.
எனவே பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில்
முன்பு இருந்த விதிகளில் இருந்து இப்போது என்ன
புதிய மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது
என்றும் எப்படி விண்ணப்பிப்பது என்றும்
இங்குப் பார்ப்போம்.
பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும்
குறைவாகவும், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவாக
உள்ளவர்களும் இத்திட்டத்தின் கீழ் வீட்டைக்
கட்டுவதற்கான பல சலுகைகளைப் பெறலாம்.
சொந்தமாக இடம்
உங்களிடம் வீடு கட்டுவதற்கான சொந்தமாக இடம்
இருந்தால் போதும். உங்களுடன் இணைந்து அரசு
அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வீட்டைக்
கட்டிவிடலாம். இப்போது வீடு கட்ட சொந்தமாக இடம்
வாங்கவும் திட்டங்கள் உள்ளன.
பழைய விதி
நீங்கள் வீடு கட்டப் போகும் இடம் 30 சதுர
மீட்டராக இருந்தால் உங்களுடைய வருமானம்
வருடத்திற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
அதுவே 60 சதுர மீட்டராக இருந்தால் உங்கள்
வருமானம் 3 முதல் 6 லட்சத்திற்குள் இருக்க
வேண்டும்.
புதிய விதி
பழைய விதியில் 3 லடசம் முதல் 6 லட்சம் வரை
இருந்த கடன் தொகையை உயர்த்தி 6 லட்சம் முதல்
12 லட்சம் வரை பெறலாம் என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா
திட்டத்தின் மூலம் வீடு கட்ட எப்படி
விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.
பாங்க் ஆஃப் இந்தியா வழியாக விண்ணப்பிக்க
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் பற்றிய
முழு விவரங்களைப் பெற http://www.bankofindia.
co.in/ இந்த இணைப்பைப் பார்க்கவும்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை இந்த
இணைப்பில் http://www.bankofindia.co.in/
பெறலாம்.
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய
ஆவணங்களைப் பற்றிய விவரங்களை இந்த
இணைப்பில் http://bankofindia.co.in/ பெறலாம்.
சுய அறிவிப்பு படிவத்திற்கு http://
www.bankofindia.co.in/ இந்த இணைப்பு
மூலமாகப் பெறலாம்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வாயிலாக பிரதான் மந்திரி அவாஸ்
யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க இந்த
இணைப்பில் https://www.icicibank.com/ உள்ள
கிளைகளை நீங்கள் தொடர்புகொள்வதன் மூலம்
விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
பிற வங்கிகள் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா
திட்டம் மூலம் பஞ்சாம் நேஷ்னல் வங்கி, கர்நாடகா
வங்கி போன்ற பிற வங்கிகளும் வீட்டுக் கடன்
அளிக்கின்றனர்.
எனவே உங்களது அருகில் உள்ள ஏதேனும்
வங்கி கிளைகளுக்கு சென்று விவரங்களைக் கேட்டு
விண்ணப்பிக்கலாம்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்
துறை அமைச்சகம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற
வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகத்தின் http://mhupa.gov.in/ இந்த இணைப்பில் செல்வதன்
மூலம் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்
முழு விவரங்கள், மற்றும் எல்லா
விண்ணப்பங்களையும் பெறலாம்.