50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு கூடாது!

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

sellur raju

மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, வெங்காய விலை கடும் உயர்வை தொடர்ந்து மொத்த விலை கடைகளுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் .

தமிழ்நாட்டில், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்திருக்கிறார்.

இது குறித்து அவர் டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இந்த அறிவுறுத்தல் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில், மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :