December 3, 2021, 10:28 am
More

  பெண் டாக்டர் பலாத்கரித்து கொலை: கைதான மொஹம்மத் பாஷா, லாரி டிரைவர், கிளீனரை தூக்கிலிட வேண்டும்! மக்கள் ஆவேசம்!

  இதை அடுத்து, வண்டியை நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடியில் காத்திருக்குமாறு பவ்யா அறிவுறுத்தினார். ஆனால் டோல்-பிளாசாவில் நிற்பது ரொம்பவே மோசமான அனுபவமாக இருக்கும் என்று பிரியங்கா மறுத்துள்ளார்.

  IMG 20191129 WA0010 - 1

  ஐதராபாத்தில் நடைபெற்றுள்ள சம்பவம், நாட்டையே உலுக்கியுள்ளது. 27 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் இளம்பெண், ஹைதராபாத்தில் முன்னிரவு நேரத்தில் லாரி டிரைவரால் பலாத்கரித்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

  இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் மொஹம்மத் பாஷா என்பவன் முக்கியக் குற்றவாளியாக கைது செய்யப் பட்டிருக்கிறான். இவன் மஹ்பூப்நகர் மாவட்டம் நாராயணபேட்டைச் சேர்ந்தவன். அவனுடன் கூடிகண்ட்லாவைச் சேர்ந்த அவீன் என்ற லாரி டிரைவரும், சிவா என்ற கிளீனரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

  இவர்களில் பாஷா பேரில் ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர். குற்றவாளியின் கைகால்களை வெட்டவேண்டும். அவனைப் பார்க்கும் பிறருக்கு குற்றம் செய்ய பயம் வர வேண்டும் என்று மகளிர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

  mohammed accused - 2
  மொஹம்மத் பாஷா

  இதனிடையே, மொஹம்மத் பாஷாவின் அம்மா நீலிக்கண்ணீர் வடித்தார். என் மகன் எந்த தப்பும் செய்யாதவன். அவனை எதுவும் செய்து விடாதீர்கள் என்று ஒப்பாரி வைத்தார். லாரி ஓட்டுவான். வீட்டுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் வருவான் என்றாள்.

  உடல் நலன் சார்ந்த பிரச்னைக்காக டாக்டரிடம் சென்று மருத்துவ சிகிச்சி எடுத்துக் கொண்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய போது, பிரியங்கா ரெட்டி வந்த ஸ்கூட்டி பஞ்சர் ஆனது. இதை அடுத்து, அவர் வண்டியைத் தள்ளிக்கொண்டே வந்துள்ளார். அப்போது தனது தங்கையிடம் போனில் பேசிக்கொண்டே வந்துள்ளார்.

  basha mohammed - 3
  மொஹம்மத் பாஷாவின் தாய்

  தான் வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்தது கண்டு, ஓரிருவர் உதவி செய்வதாக முன்வந்தனர் என்றும், தாங்கள் வண்டியை சரி செய்து தருவதாகக் கூறி சென்றனர் என்றும், ஆனால் அவர்கள் லாரி டிரைவர்கள் போல் உள்ளனர், அவர்களைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்றும் அச்சத்தில் பேசியுள்ளார் பிரியங்கா ரெட்டி.

  6 நிமிடங்கள் 45 வினாடிகள் நீடித்த அவர்களின் பேச்சில் பிரியங்கா சாதாரணமாக பேசுகிறார் என்றாலும், தனக்கு உதவி செய்தவர்களைப் பார்த்து பயப்படுவதாக அவர் சொன்னது தங்கை பவ்யாவுக்கு ஏதோ போல் இருந்துள்ளது.

  priyanka parents - 4
  பிரியங்கா ரெட்டியின் பெற்றோர்

  இதை அடுத்து, வண்டியை நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடியில் காத்திருக்குமாறு பவ்யா அறிவுறுத்தினார். ஆனால் டோல்-பிளாசாவில் நிற்பது ரொம்பவே மோசமான அனுபவமாக இருக்கும் என்று பிரியங்கா மறுத்துள்ளார்.

  இதை அடுத்து, பவ்யா அந்த ஸ்கூட்டியை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்துவிடு என்று கூறியுள்ளார்.

  “நான் எனது ஸ்கூட்டியை ஓட்டுவதற்கே தொடங்கினேன், ஆனால் அவர்கள் பின்னால் இருந்து கத்த ஆரம்பித்தார்கள்.. மேடம் உங்கள் வண்டி டயர் காத்து இல்லாமல் தட்டையாகிவிட்டது. நீங்கள் மேலே செல்ல முடியாது என்றனர்.

  அப்படியே போய் பஸ் ஸ்டாண்டில் அதை சரிசெய்ய முடியும் என்று நான் நினைத்தாலும், அவர்கள் என்னை மேலே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் என்னை கீழே இறக்கி, அதை சரிசெய்ய ஒரு பையனை அனுப்பினார்கள். ஆனால் எல்லா கடைகளும் மூடப்பட்டதாகக் கூறி அவனும் திரும்பினான்” என்று பிரியங்கா தனது சகோதரி பவ்யாவிடம் செல்போனில் கூறியுள்ளார்.

  kcr tweet - 5

  பிரியங்கா கடைசியாக இரவு 9.22 மணிக்கு தன்னிடம் பேசியதாகவும், இரவு 9.44 மணியளவில் அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் பவ்யா கூறினார்.

  சிறிது நேரம் காத்திருந்தபின், அவர்கள் அவளைத் தேடுவதற்காக டோல் பிளாசாவுக்கு விரைந்தனர்.

  பின்னர் அவர்கள் கடைகளிலும், டோல் பிளாசாவிலும் விசாரித்து, சுற்றியுள்ள பகுதிகளில் தேடினர், பின்னர் அவர்களால் கண்டுபிடிக்க முடியாதபோது போலீஸ் புகார் அளித்தனர்.

  பயமாக இருந்தால் ஸ்கூட்டியை அங்கேயே விட்டுவிட்டு நீ ஆட்டோ பிடித்து வா என்று அவள் தங்கை கூறியபோதும் நாளைக்கு ஆபீஸ் போவதற்கு வேண்டாமா? ஸ்கூட்டி வேண்டுமே … என்று கேட்டுள்ளார் பிரியங்கா.

  இதனிடையே, 100 க்கு போன் செய்திருக்கலாமே என்று சிலர் இப்போது கேட்கின்றனர். அவளுக்கு எமன் ஸ்கூட்டி வடிவில் வந்தான் என்றும், தன் ஸ்கூட்டியைப் பற்றி கவலைப்பட்ட பெண் தன்னைப் பற்றி கவலைப்படவில்லையே என்றும், பலரும் அங்கலாய்க்கிறார்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-