அரசியல் 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் தேர்தல்! உச்ச நீதிமன்றம் அனுமதி!

9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் தேர்தல்! உச்ச நீதிமன்றம் அனுமதி!

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

-

- Advertisment -

சினிமா:

எம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு!

4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்! 3 மொழிகளில்…!

ஜில் படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

பிரபல நடிகர் திருமணம்! மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்!

திருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது.
-Advertisement-

வெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்!

திருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை

இதுதான் இந்தோனேஷியா! பாடம் படிக்குமா இந்தியா!?

இதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.!

து(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்!

துக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.

தொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து?

தினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.01, ஆகவும், டீசல் விலை...

விசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா! குறைந்த செலவில்!

இந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

நடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்!

ஒய்சிபி எம்எல்ஏ 'பிய்யபு' மதுசூதனன் ரெட்டி மீண்டும் ஒருமுறை செய்தியில் வந்துள்ளார்.

நன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா?! நெல்லையப்பர் கோயில் கூத்து!

நன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

குமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம்! மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்!

இதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..!

திருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு! ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்!

மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..!

சரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … ? இனி "வந்தே மாதரம்" பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … !

பட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்!

பட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர்.

23 வருட பிரச்னைக்கு முடிவு! ப்ரு பழங்குடியினர் மகிழ்ச்சி!

அமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.

2வது ஒருநாள் போட்டி: 36 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- Advertisement -
- Advertisement -

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

முன்னதாக, 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயார் எனவும், உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

இதனால் பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. மேலும், தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடையாததால் அறிவிக்கப்பட்ட கிராம ஊரக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் திமுக சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணையின்போது, திமுக சார்பில் தெரிவிக்கப் பட்ட கருத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், அது நியாயமான முறையில் நடைபெறவேண்டும். ஆனால் வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறப் பட்டது.

இதற்கு மாநில தேர்தல் ஆணையம், 2011ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி நடத்தப் படும் என்று பதிலளித்தது.

தமிழக அரசு சார்பில் முறையிட்டபோது, தொகுதி மறுவரையறை செய்யப்பட வில்லை என நீதிமன்றம் நினைத்தால் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால் நீதிமன்றத்தால் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்றது தமிழக!

இதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்… பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடியாத நிலையில் உள்ளாட்சி தேர்தலில் குழப்பம் வராதா. தேர்தலை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது! ஆனால் முறையான விதிகள் பின்பற்றவில்லை எனில் தேர்தலை தள்ளி வைக்க முடியும். இந்த வழக்கு தொடர்பாக மதியம் 2 மணிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளோம். மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் எனக் கூறப் பட்டது. இதை அடுத்து, 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்து, தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் முக்கிய அம்சங்கள்:

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி

அதை செய்ய வேண்டியதில்லை என மாநில தேர்தல் ஆணையம் பதில்..

ஏன் – நீதிபதிகள்

வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன – திமுக தரப்பு வாதம்.

மாவட்ட தேர்தல் அதிகாரிதான், தொகுதி வரையறை அதிகாரியாகவும் உள்ளார் – திமுக.

தொகுதி வரையறை உள்ளிட்ட சட்ட விதிகளை பின்பற்றாமல் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது – திமுக.

தொகுதி மறு வரையறை, இட ஒதுக்கீடு என எல்லா பணிகளும் நிறைவடைந்து விட்டது – மாநிலத் தேர்தல் ஆணையம்.

தொகுதி மறுவரையறை பணிகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்துள்ளோம். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்ய முடியும் – தேர்தல் ஆணையம்

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள்: தமிழக அரசு

தடைவிதித்தால் மொத்தமாக தடைவிதியுங்கள் இல்லை என்றால் குழப்பம் ஏற்படும்: திமுக வாதம்

நாடாளுமன்றம் என்ன விதி வகுத்துள்ளதோ அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் – உச்சநீதிமன்றம்
குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது – உச்ச நீதிமன்றம்

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின், எந்த நீதிமன்றத்தாலும் தள்ளி போட முடியாது – தமிழக அரசு

தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளி போட முடியும் – நீதிபதிகள்

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,911FansLike
196FollowersFollow
746FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

மாறுபட்ட சுவையில் ராஜ் கச்சோரி!

தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய சமையல்: மரவள்ளி கிழங்கு புட்டு!

றிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும்.

விரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்!

காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |