32 C
Chennai
02/07/2020 8:19 PM

வெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்

Must Read

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று!

இதை அடுத்து அவர் சென்னை க்ரீன்வேஸ் ரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா; சென்னையில் 2316 பேருக்கு உறுதி!

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்த போது

புகைபிடிப்பவரா நீங்கள்? கொரோனா அபாயம்.. எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!

கைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
nirmala seetharaman வெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

வெங்காய விலை உயர்வைக் கட்டுப் படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

மேலும் அவர் இது குறித்து பேசியவற்றின் முழு வீடியோ பதிவும் டிவிட்டர் தளத்தில் பதிவிடப் பட்டு, அவரது உரையில் இருந்து ஒரு சிறு பகுதி மட்டும் எடுத்து வெளியே வைரலாக்கப் பட்டு, தவறான முறையில் பொருள் கொள்ள வைக்கப் படுவதாகவும் கூறப் பட்டுள்ளது.

வெங்காய விலை உயர்வு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு குறுக்கிட்டு பதிலளித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர், நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று கூறினார். அவரது இந்தப் பேச்சு வைரலாக்கப் பட்டு வருகிறது.

நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.130 முதல் ரூ.180 வரை உள்ளது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படும் வெங்காயத்தின் அளவும் குறைந்து வருகிறது. இதனால் வெங்காய விலை பெரிதும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், வெங்காய விலை உயர்வைக் கண்டித்து தில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த விவாதம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

வெங்காய விலை உயர்வு குறித்து டிச.04 நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, வெங்காய விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் எனவும், பொருளாதார மந்த நிலை காரணம் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குற்றம்சாட்டினர்.

அப்போது ஒருவர், வெங்காயத்தின் இந்த அதிரடி விலை ஏற்றம் அதிகம் வெங்காயம் சாப்பிடுபவர்களை எரிச்சலடையவே வைக்கும் என்றார். அதற்கு குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன், “நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்” என்று கூறி பேச்சைத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவரது இந்தப் பேச்சு, அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நிர்மலா சீதாராமன் குறிப்பிடுகையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், தற்போதுள்ள நிலையை சமாளிக்கவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad வெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

பின் தொடர்க

17,875FansLike
78FollowersFollow
70FollowersFollow
899FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

More Articles Like This