பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா அங்கு தனது கையால் அடித்து சபதம் ஏற்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, உடல்நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சரண்டைய 2 வாரங்கள் அவகாசம் கேட்டார். சசிகலா தரப்பில் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைய உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்துக்கு சாலைமார்க்கமாக பயணிக்க சசிகலா முடிவு செய்தார். பெங்களூரு செல்லும்முன், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்ற சசிகலா, அவரது சமாதியின் மீது கையால் அடித்து சபதமேற்ற பின்னர் கிளம்பினார்.