எடப்பாடி அரசுக்கு எதிராக திமுக வாக்களிக்கும்: ஸ்டாலின்

தமிழகத்தில் அனைத்து மக்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். மேலும் நாளை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக திமுக வாக்களிக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.